SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேனிக்காரரின் புறக்கணிப்பு ஏன் என்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-07-12@ 00:16:57

‘‘என்ன தேனிக்காரர் புறக்கணிப்பு பற்றி ஏதாவது தெரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ம். மாநிலங்களவையில் இலை, மாங்கனி சார்பில் தேர்வான மூன்று பேர் கோட்ைடயில் சேலம் விவிஐபியை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். வேட்புமனு தாக்கலின்போது உடன் இருந்த ேதனிக்காரருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாம்.  ஆனால் அவர் வேட்பாளர்கள் தேர்வில் எனக்கு அதிருப்தி... தமிழகத்தின் வடமாவட்டத்தில் ஒருவருக்கும் தென் மாவட்டத்தில் ஒருவருக்கும் கொடுக்காமல் அருகருகில் உள்ள வேலூர், சேலம் மாவட்டக்காரர்களுக்கு கொடுத்தது தவறு...  வேட்புமனு தாக்கலின்போது மாங்கனி கட்சியின் தலைவர் வருகிறார் என்பதால் மரியாதை நிமித்தமாக அன்று வந்தேன். அதில் அரசியல் செய்யக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் இப்போது அப்படி அல்ல. எனக்கு பிடிக்காதவர்கள் வெற்றி  பெற்றுள்ளனர். அவர்களை வாழ்த்தினால் என் ஆதரவாளர்கள் கோபித்து கொள்வார்கள் என்பதால் நான் சேலம்காரருடன் இணைந்து சந்திப்பதை தவிர்த்துவிட்டேன் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் மாங்கனி கட்சியை  சேர்ந்த எம்பி மட்டும் தேனிக்காரரை சந்தித்து ஆசி பெற்றாராம்..’’ என்று விளக்கம் கூறினாராம்.

‘‘ அப்புறம் ராஜ்ய சபா பதவி இழந்த எம்பிக்கு தாமரை விவிஐபியின் பார்வை பலனை தருமா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நிச்சயமாக இருக்கும் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கட்சி மாறுகிறாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் நிச்சயமாக அவரை ஒரு மாநிலத்தின் கவர்னர் அல்லது மத்தியில் ஒரு முக்கியமான பதவியில்  அமர்த்த டெல்லி விவிஐபி தீர்மானித்துவிட்டாராம். அதன் அச்சாரம்தாம் பதவி ஓய்வுக்கு பிறகு டெல்லி விவிஐபியை தனியாக சந்தித்து பேசியதுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டதாம். அப்போது இருவரும் பல்வேறு விஷயங்களை  பேசினார்களாம். எல்லாம் பாசிட்டிவ்வாக இருந்ததாக சொல்கிறார்கள். அவரின் சந்திப்பு தமிழகத்தில் சேலம்காரருக்கும் தேனிக்காரருக்கும் தேள் கொட்டியது போன்று இருந்ததாம்... உடனடியாக டெல்லியில் உள்ள தமிழக அதிகாரிகளுக்கு போன்  செய்து என்ன நடந்தது... அப்பாயின்மென்ட் யாரை கேட்டு வாங்கி கொடுத்தீர்கள். உள்ளே பேசிய விஷயங்கள் அனைத்தும் எனக்கு வந்து சேர வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளதாம். அவர்களும் தகவல்களை சேகரிக்கும் பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘ டாஸ்மாக் கடையை பில்லிங் சிஸ்டம் சிக்கலாக இருப்பதேன்..’’ ‘‘தமிழகத்தில் 3,825 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தினமும் 1.2 ேகாடி மது பாட்டில் விற்பனையாகிறது. நடப்பாண்டில், மதுபான விற்பனை 26 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி விட்டது. மதுபான கடைகளில் பில் புத்தகம் மூலமாக, பில் வழங்க  வேண்டும். ஆனால், எந்த கடைகளிலும் பில் வழங்கப்படுவதில்லை. இதற்கு பதிலாக, தினமும் கடைகளில் மதுபான விற்பனை முடிந்ததும் ஒட்டுமொத்தமாக பில் போட்டு அதை கடை விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு  வழங்கியதுபோல் கணக்கு காட்டுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. காரணம் பில் வழங்கினால் அதில் குறிப்பிடும் தொகைைய மட்டும் எல்லா வாடிக்கையாளர்களும் வழங்குவார்கள். கடைக்காரர்களும் கூடுதலாக 5, 10 என்று கேட்டு  வாங்க முடியாது. இந்த பணத்தில்தான் பலரின் வாழ்க்கையே ஓடுகிறது என்பது நிதர்சனம்.

இந்நிலையில் பில் வழங்காமல் மது பாட்டில் விற்பதால் முறைகேடுகள் நடக்கிறது. இதை தடுக்க பில்லிங் சிஸ்டம் அவசியம் எனக்கருதி, அனைத்து  டாஸ்மாக் கடைகளுக்கும் பில்லிங் மெஷின் வாங்க, கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இதுவரை 12 முறை டெண்டர் விடப்பட்டது. இதற்காக, 12.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதி இதுவரை பயன்படுத்தப்படவில்லை. பில்லிங்  மெஷின்களும் வந்துசேரவில்லை. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் டாஸ்மாக் அதிகாரிகள் சிலரே இழுத்தடிக்கிறார்கள். பில்லிங் சிஸ்டம் வந்தால் முறைகேடு செய்ய முடியாது. இதன் காரணமாக டாஸ்மாக் நிர்வாகமே, பில்லிங்  சிஸ்டத்திற்கான டெண்டரை இறுதிசெய்யாமல் தாமதம் செய்து வருகிறது. இத்திட்டத்தை கிடப்பில் போட்டு முடிந்தவரை டெக்னிக்காக காய் நகர்த்தி வருகின்றனர் டாஸ்மாக் அதிகாரிகள். அப்படி பில் மிஷன் வந்தால் டாஸ்மாக்கில் வேலை  செய்பவர்களில் பலரும் அதிகாரிகளில் பலரும் வேறு வேலைக்கு சென்றுவிடுவார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஒருத்தரை டிரான்ஸ்பர் செய்ததற்கு கொண்டாட்டமா... அப்படி அவர் என்ன செய்துவிட்டார்...’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் எஸ்எஸ்ஐயான யோகமான ஒருவர் ரைட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்த ஊரே திருப்பத்தூர்தான். சொந்த ஊரிலேயே 15 ஆண்டுகளுக்கும் மேல் இவர் சென்னையில் உள்ள தனது  செல்வாக்கை பயன்படுத்தி ரைட்டராக பணிபுரிந்து வந்தாராம். இடையில் வாணியம்பாடி உட்பட பல இடங்களுக்கு மாற்றப்பட்டாலும், உடனடியாக திருப்பத்தூருக்கே வந்துவிடுவாராம். டிஎஸ்பியை பார்த்து பயப்படுகிறார்களோ இல்லையோ,  இவரை பார்த்து திருப்பத்தூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட 7 காவல் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர் தொடங்கி 2ம் நிலை காவலர்கள் வரை பயப்படுவார்களாம்.

இவருக்கு தனியாக ஒவ்வொரு ஸ்டேஷனில் இருந்தும் மாதந்தோறும் மாமூல் போய் சேர்ந்து விட வேண்டுமாம். அப்படி சேராவிட்டால் விடுப்பு தொடங்கி அனைத்திலும் பிரச்னையை ஏற்படுத்துவாராம். அதோடு சமயம் பார்த்து டிஎஸ்பி மூலம்  மெமோ கொடுத்து விடுவாராம். இவரது அலம்பலுக்கு முடிவு கிடைக்குமா என்று ஏங்கி தவித்த திருப்பத்தூர் சப்-டிவிஷனை சேர்ந்த போலீசார், யோகமானவர் தொடர்பாக சென்னை வரை புகாரை கொண்டு சென்றார்களாம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யோகமானவரை ஏலகிரிக்கு மாற்றியதுடன், உடனடியாக பணியில் சேர வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்களாம். இந்த தகவல் நேற்று காலை சப்-டிவிஷன் காவல் நிலையங்களில்  பரவியதும், காவலர் தொடங்கி இன்ஸ்பெக்டர் வரை அனைவரும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்களாம்,,.’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • formars29

  வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

 • coronadeath29

  கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

 • thee29

  பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

 • vadothara29

  குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்