SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம்..!

2019-06-25@ 10:10:24

சென்னை: என்னை பிடிக்காவிட்டால் அமமுகவிலிருந்து நீக்குங்கள் என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து தினகரனையும், சசிகலாவையும் நீக்கிய பிறகு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்களில் தங்க தமிழ்ச்செல்வன் முக்கியமான நபராக பார்க்கப்பட்டார். கட்சியின் முக்கிய முடிவுகளில் தங்க தமிழ்ச்செல்வனின் ஈடுபாடு  அதிகமாகவே இருந்தது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக சார்பில் தேனி தொகுதியில் அவர் போட்டியிட்டார். ஆனால், இத்தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை அடைந்தார்.

தேர்தல் தோல்வியாலும், தலைமையின் மேல் உள்ள அதிருப்தியாலும் தங்க தமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவிற்கே செல்ல உள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகியது. இதனால், டிடிவி.தினகரனுக்கும், தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், டிடிவி.தினகரனை ஆபாச வார்த்தைகளால் தங்க தமிழ்செல்வன் வசைபாடும் ஆடியோ ஒன்று நேற்று மாலையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், தங்க தமிழ்செல்வனும், டிடிவி.தினகரனின்  உதவியாளர் ஜனா(எ) ஜனார்த்தனனும் பேசுகின்றனர். அவர் பேசியதாவது:

தங்க தமிழ்செல்வன்: ஹலோ கேக்குதா...
இப்போஉதவியாளர்: கேக்குதுண்ணே...கேக்குதுண்ணே சொல்லுங்க.
தங்க தமிழ்செல்வன்: எங்க இப்ப அவர்...அண்ணன் இருக்காரா?
உதவியாளர்: இல்ல அண்ணே...நான் ஊருக்கு வந்துட்டன்னே...
தங்க தமிழ்செல்வன்: இந்த மாதிரி ஒரு பொட்டத்தனமான அரசியல் செய்றத நிப்பாட்ட சொல்லுப்பா...அவன, உங்க அண்ணன.
உதவியாளர்: ஏன் அண்ணே. எண்ணன்னே?
தங்க தமிழ்செல்வன்: உண்மையிலேயே பொட்டத்தனமான ஒரு அரசியல். நான் வந்து விஸ்வரூபம் எடுத்தேன் என்றால் நீங்கள் அழிந்துபோவீர்கள்... நீ உட்பட அழிந்துபோவ...நான் நல்லவன்.

உதவியாளர்: சரிண்ணே...தங்க தமிழ்செல்வன்: தேனி மாவட்டத்தில் கூட்டம் போடுற ...‘பீப் வார்த்தை’.... நாளைக்கு நான் மதுரையில் கூட்டம் போடுறேன் ...‘வெண்ண’...பாரு, என்ன நடக்குதுனு பாரு. ஆனால், இந்த மாதிரி ஒரு பேடித்தனமான அரசியல் பண்ண  வேணாம்னு உங்க அண்ணன்கிட்ட சொல்லு...இந்த மாதிரி அரசியல் பண்ணவேணாம்... நீ தோத்துப்போவ என்னைக்கும் ஜெயிக்க மாட்ட. இதுபோன்று தொடர்ந்து தங்க தமிழ்செல்வன் டிடிவி.தினகரனை ஆபாச வார்த்தைகளால் வசைபாடிக்கொண்டிருக்கும் போதே பாதியில் ஆடியோ கட் ஆகிறது. இந்த ஆடியோ அமமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில் ஆடியோ தொடர்பாக அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். என்னை பிடிக்காவிட்டால் அமமுகவிலிருந்து நீக்குங்கள். கட்சியை பற்றி நான் பேசியது உண்மை தான்; என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். டிடிவி தினகரன் கட்சியை பற்றி தங்கதமிழ்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pune1

  புனேவில் பயங்கர வெடிச் சத்தத்துடன் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை..!!

 • hathraas1

  நாட்டையே உலுக்கிய ஹாத்ராஸ் இளம்பெண் கொடூர கொலை!: குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வெடிக்கும் போராட்டங்கள்...உரிய நீதி கிடைக்குமா?

 • chinamartyrs1

  நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் அனுசரிப்பு!: அதிபர் ஜி ஜின்பிங், தலைவர்கள் பங்கேற்பு..!!

 • arch1

  அர்மீனியா - அசர்பைஜான் இடையேயான மோதல் முழுமையான போராக மாறியது: சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ கடந்தது..!!

 • 01-10-2020

  01-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்