அமெரிக்காவின் வர்த்தகப்போர் குறித்து ஜப்பானில் 3 தலைவர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை
2019-06-24@ 16:37:17

ஒசாகா: அமெரிக்காவின் வர்த்தகப்போர் குறித்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகிய 3 தலைவர்களும் ஜப்பானின் ஒசாகா நகரில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஜி 20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு, ஜப்பானின் ஒசாகா நகரில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் ப்ரதிமார் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட ஜி 20 நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்துக்கொள்கின்றன.
இந்த மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசும்போது இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போருக்கு முடிவு கட்டப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம் ஒசாகாவில் மோடி, ஜின்பிங், புதின் ஆகிய மூன்று தலைவர்களும் சந்தித்து முத்தரப்பு பேசசுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த முத்தரப்பு பேசசுவார்த்தை நடைபெற, உள்ளதை சீன வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் ஜாங் ஜூன் உறுதிப்படுத்தியுள்ளார்.
பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அண்மையில் பிஷ்கெக் நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் 3 தலைவர்களும் சந்தித்து முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். ஒசாகாவில் 3 தலைவர்களும் சந்தித்து பேச இருப்பது தற்போதுள்ள சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவை நேரடியாக குறிப்பிடாமல் ஒரு குறிப்பிட்ட நாது பின்பற்றும் ஒருச்சார்பு, தொழிற்காப்புவாதம், ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் பாதிப்புகளை சர்வதேச சமூகம் முழுமையாக உணர்ந்திருப்பதாக அவர் கூறினார்.
அந்த நாடு வர்த்தகக் கூட்டாளிகளை நடத்தும் முறை உலக வர்த்தகம், முதலீடு, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அச்ச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த போக்கை எதிர்ப்பதில் சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய 3 நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியத்துவம் பெறுவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் அமெரிக்காவின் வர்த்தகப் போர் குறித்து மோடி, ஜின்பிங், புதின் சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி..!
உலக கொரோனா நிலவரம்: 25.36 லட்சம் பேர் உயிரிழப்பு; 11.43 கோடி பேர் பாதிப்பு; 89.92 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்
கொரோனாவுக்கு உலக அளவில் 2,536,467 பேர் பலி
பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார்: இம்ரான்கான் அறிவிப்பு
நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 317 மாணவிகள் கடத்தல்: போலீஸ், ராணுவம் மீட்பு நடவடிக்கை
கிளர்ச்சியாளர்கள் மீது குண்டுவீச்சு: உனக்கும் இதே கதிதான்: ஈரானுக்கு பைடன் எச்சரிக்கை
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!