நடிகர் சங்கத்திலிருந்து பலர் நீக்கப்பட்டதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட் உத்தரவு
2019-06-21@ 04:54:28

சென்னை: நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஏழுமலை என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பாக நடந்தது. அப்போது 3,171 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று நடிகர் சங்கம் சார்பில் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சங்கத்துக்கு முறையாக சந்தா செலுத்தாத 53 பேர் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கத்தை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீக்கப்பட்ட அனைவரும் போலியானவர்கள். தேர்தல் அறிவிப்பு முறையாகவே வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், போலியான உறுப்பினர்கள் என்றால் எப்படி கடந்த முறை தேர்தலில் வாக்களித்தனர். சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆவணங்களை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.அதன்படி சங்க உறுப்பினர்கள் நீக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை நடிகர் சங்கம் தாக்கல் செய்தது.அவற்றை ஆய்வு செய்த நீதிபதி, உறுப்பினர் நீக்கத்தை நடிகர் சங்கம் சரியாகத்தான் செய்துள்ளது. மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. தேர்தல் முடிந்ததும் அதன் முடிவுகளை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடரலாம் என்றார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமலயே நீக்கப்பட்டுள்ளனர். அதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றார். இதை கேட்ட நீதிபதி விசாரணையை 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும் செய்திகள்
பேருந்தில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்
கோயில் பூசாரி தற்கொலை
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரால் பரபரப்பு
புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
மாட்டு பொங்கலுக்கு கோயில் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டுவதற்கு தடையை கண்டித்து போராட்டம்
திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் குப்பை கழிவுகள்: துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்