SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காயத்தால் விலகினார் தவான்: ரிஷப் பன்ட் சேர்ப்பு

2019-06-20@ 02:03:02

லண்டன்: இந்திய அணி தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தின்போது, பவுன்சர் பந்து தாக்கியதில் தவானுக்கு காயம் ஏற்பட்டது. அந்த போட்டியில் அவர் 117 ரன் விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்திய அணி பீல்டிங்கின்போது களமிறங்காமல் ஓய்வெடுத்த தவானுக்கு பின்னர் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இடது கை கட்டைவிரலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.  இந்த காயம் முழுவதுமாக குணமடைய குறைந்தபட்சம் 3 வாரங்கள் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். எனினும், உடனடியாக அணியில் இருந்து தவானை விலக்கிக் கொள்ளாமல் பொறுத்திருந்து பார்க்க அணி நிர்வாகம் முடிவு செய்தது. அதே சமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பன்ட் (21 வயது) இங்கிலாந்து வரவழைக்கப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரோகித்துடன் இணைந்து கே.எல்.ராகுல் இன்னிங்சை தொடங்கிய நிலையில், 4வது வீரராக ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் களமிறக்கப்பட்டார். இந்திய அணி அடுத்து 22ம் தேதி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ள நிலையில், உலக கோப்பையில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் தவான் விளையாட மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் இடம் பெறுகிறார். இதனால் நடுவரிசை பேட்டிங் மேலும் வலுப்பெற்றுள்ளதால் இந்திய அணி உற்சாகம் அடைந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

 • monkey_thaayklannn1

  குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!

 • eelephanttt11

  35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்த உலகின் தனிமையான காவன் யானைக்கு புதிய வாழ்க்கை : துதிக்கையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது

 • muskes_ambani11

  27 தளங்கள், 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம், 168 கார் பார்க்கிங், 9 விரைவு லிப்டுகள்,600 ஊழியர்கள்... உலகின் 2வது பிரமாண்டம் மிகுந்த முகேஷ் அம்பானியின் வீடு!!

 • delhi_farmnmmmeee

  திறந்தவெளியில் சமைத்து, கடும் குளிர் சாலையில் உறங்கியபடி, 7ம் நாளாக தொடர் போராட்டம் :டெல்லியில் மிரளவைக்கும் வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்