SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு: டெல்டாவில் மீண்டும் போராட்டம் தீவிரம்... தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டி விவசாயிகள் கோஷம்

2019-06-19@ 20:04:41

மன்னார்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டாவில் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மன்னார்குடி அருகே நேற்று குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள், இன்று வயலில் இறங்கி தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டி கோஷம் எழுப்பினர். தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அழிவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் என்று விவசாயிகள், பொது மக்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் இதுபற்றி தமிழக அரசு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மவுனமாக உள்ளது. எனவே இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ரகசிய ஆதரவு அளிக்கிறதோ என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் மீது விவசாயிகள், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இந்த திட்டத்தை கைவிடக்கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 1ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 6, 7, 8 ஆகிய தேதிகளில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ைஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக டெல்டாவில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மீண்டும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் 67 பனையூர் ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் அனைத்து கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. திமுக மாவட்ட பிரதிநிதி நித்தியானந்தம் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும், காவிரி டெல்டா பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், மத்திய அரசின் தமிழக விரோத, விவசாயிகள் விரோத போக்கிற்கு மாநில அரசு துணை நிற்க கூடாது, கோட்டூர் ஒன்றியத்தில்

கால்நடைகளுடன் போராட்டம்
திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ஜோசப் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது. வரும் 22ம் தேதி கொத்தமங்கலத்தில் கால்நடைகள் பங்கேற்கும் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • planet Vaikundam

  ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

 • 04-12-2021

  04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • lunch-ofz

  லஞ்ச் டைம் ஆச்சா...இதோ வந்துட்டோம்: வேலை சுமையில் ஓடுபவர்களுக்கு அலுவலகத்திற்கு சென்று சாப்பாடு கொடுத்து அசத்தும் ஒரே குடும்பத்தினர்..!!

 • Ministers

  மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

 • Ohmicron_Rajiv Gandhi_Bed

  ஓமைக்ரான் எதிரொலி; வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தயார் நிலையில் 150 படுக்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்