சென்னை விமான நிலையத்தில் 50 லட்சம் தங்கம் பறிமுதல்: 3 பேர் பிடிபட்டனர்
2019-06-19@ 03:35:33

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ₹50 லட்சம் மதிப்புடைய 1.5 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 3 பேரை கைது செய்தனர். ரியாத்தில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த முகமது உசேன் ேஷக் (51) என்பவர் சுற்றுலா பயணி விசாவில் வளைகுடா நாடுகளுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து இவரது உடமைகளை சோதனையிட்டபோது, வளைகுடா நாடுகளில் இருந்து மீன் பிடிக்கும் நவீன கருவி ஒன்றை வாங்கி வந்திருந்தார். அதிகாரிகள் அதை பார்த்த போது வழக்கத்தை விட சற்று கனமாக இருந்தது. எனவே அந்த கருவியை கழற்றி பார்த்தபோது அதன் உள்பகுதிக்குள் தங்க துண்டுகள், தங்க பிஸ்கட்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். அவைகளின் மொத்த எடை 1.15 கிலோ. இதன் சர்வதேச மதிப்பு ₹38 லட்சம். இயைதடுத்து சுங்க அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து, முகமது ஷேக்கை கைது செய்தனர்.
இதேபோல், நேற்று அதிகாலை 5 மணிக்கு கொழும்புவில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த ஷேக் அப்துல்லா (34), ராமநாதபுரத்தை சேர்ந்த பார்த்திபன் (31) ஆகிய 2 பேர் இலங்கைக்கு சுற்றுலா பயணியாக சென்று திரும்பி வந்தனர். இவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களது உடமைகளை முழுமையாக சோதித்தனர். அதில் எதுவும் இல்லை. சந்தேகம் தீராத அதிகாரிகள் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர்களது ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். அப்போது 2 பேரின் உள் ஆடைக்குள்ளும் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். 2 பேரிடம் இருந்து 350 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ₹12 லட்சம். இதையடுத்து இவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் ₹50 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத் தால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
சோப்பு கட்டிக்குள் மறைத்து கடத்திய ரூ.35.7 லட்சம் தங்கம் பறிமுதல்: ஆசாமி கைது
வாடகை தகராறு காரணமாக துணி கடையை எரித்த 5 பேர் கைது: கட்டிட உரிமையாளருக்கு வலை
ரூ.1,500 கோடி மோசடியில் அரசு ஊழியர்கள் உட்பட 24 பேர் கைது: தெலங்கானாவில் பரபரப்பு
கஞ்சா கடத்திய 3 பேர் கைது
தொழிலாளி அடித்து கொலை
கோயில்களில் கொள்ளை
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்