வாயு புயலால் பருவமழை தீவிரமடைவதில் தாமதம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
2019-06-17@ 00:46:52

புதுடெல்லி: வாயு புயல் காரணமாக நாட்டில் பருவமழை தீவிரமடைவது தாமதமாகி உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும். ஆனால், கேரளாவில் ஒரு வாரம் தாமதமாக கடந்த 8ம் ேததிதான் பருவமழை தொடங்கியது. இதேபோல், கர்நாடகாவிலும் பருவமழை காரணமாக மழை ெபய்தது. ஆனால், மேற்குக் கடற்கரை மாநிலங்களான மகாராஷ்டிரா முதல் குஜராத் வரையிலான பகுதியில் வாயு புயல் காரணமாகத்தான் மழை பெய்தது. மற்ற மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் குஜராத்தை பருவமழை தற்போது அடைந்திருக்க வேண்டும். ஆனால், மகாராஷ்டிராவில் கூட இன்னும் பருவமழை தொடங்கவில்லை. மங்களூர், மைசூர் கூடலூர் என தென் இந்தியா தீபகற்ப பகுதியிலேயே மழை தொடர்ந்து பெய்கிறது.
மேலும், வாயு புயல் இன்று மாலை தாழ்வுநிலையாக மாறி குஜராத் கடற்பகுதியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், அரபிக்கடலை நோக்கி பருவமழைக்கு காரணமான காற்று செல்ல வழி ஏற்படும். இதனால், அடுத்த 2 அல்லது 3 நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையத்தின் கூடுதல் பொது இயக்குனர் தேவேந்திர பிரதான் கூறியதாவது: வாயு புயல் காரணமாக பருவமழை தீவிரமாவது தடுக்கப்பட்டுள்ளது. புயல் கடந்ததும் அடுத்த 2 அல்லது 3 நாளில் பருவமழை தீவிரமடையும். நாடு முழுவதும் பருவமழை 43 சதவீதம் அளவுக்கு பற்றாக்குறையாக பெய்துள்ளது. மபி, ஒடிசா, சட்டீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் 59 சதவீத அளவுக்கும், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்திய பகுதியில் 47 சதவீதம் அளவுக்கும் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்..
பீகாரில் 44 பேர் பலி
ஆங்காங்கே பருவமழை பெய்து வரும் நிலையில் பீகாரில் அனல்காற்று வீசுகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் அதிகபட்ச வெப்பமாக 114.44 டிகிரி வெயில் அடித்தது. இது, கடந்த 10 ஆண்டுகளில் ஜூன் மாதம் நிலவிய அதிகபட்ச வெப்பமாகும். இதேபோல், கயா மற்றும் பாகல்பூரிலும் 114 டிகிரி, 106 டிகிரி வெயில் பதிவானது.. இதே வெப்பநிலை நேற்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பீகாரில் உள்ள 3 மாவட்டங்களில் வீசிய அனல்காற்றுக்கு நேற்று முன்தினம் 44 பேர் பலியாகி உள்ளனர். இதில், அவுரங்காபாத்தில் 22 பேர், கயாவில் 20 பேர் நவடா மாவட்டத்தில் 2 பேர் இறந்துள்ளதாக ேதசிய பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியை பிடித்தால் குஜராத் பேரவையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல்?: மாநில அமைச்சர் பரபரப்பு பேட்டி
வாகனங்களில் ஒட்டிவைக்கப்படும் புதுவகை வெடிகுண்டுகள் மூலம் பயங்கரவாத அமைப்புகள் சதித்திட்டம்!: ஜம்மு காஷ்மீர் போலீசார் எச்சரிக்கை
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லிக்கு 40,000 பெண்கள் படையெடுப்பு : 103வது நாள் போராட்டத்தில் பங்கேற்றனர்!!
பிரதமர் நாற்காலியை மதிக்கிறேன்; ஆனால் பிரதமர் மோடி பொய் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது...மம்தா பானர்ஜி பிரச்சாரம்.!!!
தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருள் இருந்த விவகாரம்.: என்.ஐ.ஏ விசாரணை
பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனம் வாங்கினால் 5% தள்ளுபடி: மத்தியமைச்சா் நிதின் கட்கரி தகவல்.!!!
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்