தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை: அரசுக்கு தமாகா வலியுறுத்தல்
2019-06-17@ 00:17:46

சென்னை: தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமாகா மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் துணை தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், கத்திப்பாரா ஜனார்த்தனன், விடியல் சேகர், என்டிஎஸ்.சார்லஸ், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ரயில்வே ஞானசேகரன், முனவர் பாட்ஷா, மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், பிஜூ சாக்கோ, விக்டரி மனோகரன் உட்பட அனைத்து மாவட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.பின்னர் கூட்டத்தில், நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் கடுமையாக உழைத்த கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.
கிடப்பில் போடப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு திட்டத்தை தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கி செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். தமிழகத்தில் மக்கள் விரும்பாத திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். காமராஜர் பிறந்த நாள் விழாவை ஜூலை 21ம் தேதி திருப்பூரில் மாநில அளவில் பெருவிழாவாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏரி, குளங்களை தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு திட்டத்தை தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கி செயல்படுத்த வேண்டும்.
மேலும் செய்திகள்
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!!
தமிழகத்தில் 162 இடங்கள் வரை வெற்றிபெற்று திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்
பரபரப்பான தேர்தல் களம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக பாஜக தேர்தல் குழு ஆலோசனை..!
ஆண்டிபட்டியில பிரசாரம்பா...அயிரையை ரெடி பண்ணிரு...!
எங்க கட்சி ஆட்சிக்கு வந்தா 4 துணை முதல்வரை உருவாக்குவேன்: நேற்று கட்சி ஆரம்பிச்ச அர்ஜுனமூர்த்தி அலப்பறை
பறக்கும்படை குழுவில் உள்ளூர் வீடியோகிராபர்களுக்கு ‘நோ என்ட்ரி’
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!