தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி 637 பூங்காவிற்கு 2 நாளுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் சப்ளை: அம்மா உணவகங்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய தடை
2019-06-17@ 00:15:07

சென்னை: தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள பூங்காக்களுக்கு 2 நாளுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் அம்மா உணவகங்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. விடுதிகளை பூட்டும் அளவுக்கும், வீடுகளை காலி செய்யும் அளவுக்கும் தண்ணீர் பஞ்சம் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 637 பூங்காக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு ீபூங்கா பராமரிப்பிற்கு ஒரு ஹெக்டேர் பரப்பளவு கொண்டு இருந்தால் நாள் ஒன்றுக்கு 800 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.இதன்படி பார்த்தால் சென்னை மாநகராட்சியில் உள்ள 637 பூங்காவிற்கு நாள் ஒன்று 5 லட்சம் லிட்டர் தண்ணீர் வேண்டும். இந்த தண்ணீர் ஆழ்துளை கிணறுகள் மற்றும் லாரிகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பூங்காவிற்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யும் நிலை உருவாகியுள்ளது.
இதேபோன்று, அம்மா உணவகங்களும் தண்ணீர் தட்டுப்பாட்டால் திண்டாடி வருகின்றன. சென்னையில் 407 அம்மா உணவகங்கள் உள்ளன. உணவு தயார் செய்தல், பாத்திரங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக ஒரு அம்மா உணவகத்திற்கு நாள் ஒன்று 200 முதல் 250 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.தற்போது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அம்மா உணவகங்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யக் கூடாது என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஒரு வாளி தண்ணீரை கொண்டு துடைப்பம் போட்டு அம்மா உணவகத்தின் தரைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? : டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!!
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பது வெட்கக்கேடானது : தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்!!
மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்...! வைகோ வலியுறுத்தல்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா!: சென்னை அண்ணா சாலையில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் பாடல் பாடி வாழ்த்து..!!
அரசு கல்வி நிறுவனங்களில் அனைத்து ஆவணங்களையும் தமிழ் மொழியில் மட்டுமே கையாள வேண்டும்...! உயர்கல்வித் துறை உத்தரவு
தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 5-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்..! வானிலை ஆய்வு மையம் தகவல்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்