டிஎன்சிஏ 3வது டிவிஷன் லீக் எம்சிடி முத்தையா முன்னாள் மாணவர்கள் வெற்றி
2019-06-16@ 04:57:38

சென்னை: டிஎன்சிஏ 3வது டிவிஷன் சாம்பியன் லீக் கிரிக்கெட் போட்டியில் எம–்சிடி முத்தையா மேனிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் விளையாட்டு மன்றம் சாம்பியன் பட்டத்தை வென்றது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்(டிஎன்சிஏ) சார்பில் 3வது டிவிஷன் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி விளையாட்டு மனமகிழ் மன்றம் - எம்சிடி முத்தையா மேனிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் விளையாட்டு மன்றம் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய இந்தியன் வங்கி அணி 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 192 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் அந்தோணி 64 ரன்களும், கட்டாரியா 44 ரன்களும் எடுத்தனர். முத்தையா மாணவர்கள் அணியின் சதீஷ்குமார், சஞ்ஜெய் சீனிவாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
பின்னர் விளையாடிய முத்தையா மாணவர்கள் அணி 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணியின் சுக்லா 96 ரன்களும், கபூர் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இறுதிப் போட்டியில் விளையாடிய இந்த 2 அணிகளும் டிஎன்சிஏ 2வது டிவிஷன் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றுள்ளன.
மேலும் செய்திகள்
பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து
கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்... நடராஜன் உற்சாக பேட்டி
இலங்கை முன்னிலை பெற வாய்ப்பு: எம்புல்டெனியா அபார பந்துவீச்சு
சேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை
திருவில்லிபுத்தூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்