இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள நிலையிலும் மாஜி முதல்வர் சந்திரபாபுவுக்கு விமான நிலையத்தில் கெடுபிடி: சாதாரண பயணிகளைபோல் சோதனை
2019-06-16@ 00:48:31

விஜயவாடா: இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள நிலையில், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு விஐபி அந்தஸ்து வழங்க மறுக்கப்பட்டதோடு, விமான நிலையத்தில் சாதாரண பயணிகளை போல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, விமானத்தில் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு விஜயவாடா விமான நிலையத்திற்கு வந்தார். தற்போது மாநில எதிர்க்கட்சி தலைவராக உள்ள அவருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு விஐபி.க்கள் வாகனத்தில் ஏறி விமானத்துக்கு செல்ல முயன்றார். ஆனால், பாதுகாப்பு படை வீரர்கள் அவரை விஐபி வாகனத்தில் ஏற அனுமதி மறுத்தனர். மேலும், சாதாரண பயணிகளை போல் வரிசையிலும் செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் உடமைகளை சோதனையிட ஒத்துழைக்கும்படியும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த சந்திரபாபு நாயுடு தனது காரில் இருந்து இறங்கி விமான நிலையத்துக்கு வரிசையில் சென்றார்.
அப்போது, ஸ்கேன் கருவி சோதனைக்கும் அவர் உட்படுத்தப்பட்டார். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர் அவரை முழுமையாக தடவி சோதனை செய்தனர். இதன் பிறகே அவரை விமானத்திற்கு ெசல்ல அனுமதித்தனர். அப்போதும், விமானம் நிற்கும் இடம் வரை விஐபி வாகனத்தில் செல்ல அவர் அனுமதி கேட்டார். ஆனால், அதற்கும் பாதுகாப்பு படையினர் அனுமதி மறுத்தனர். இதனால் மற்ற பயணிகளுடன் விமான நிறுவனத்தின் பஸ்சிலேயே அவரும் ஏறி சென்றார். இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Tags:
சாதாரண பயணிகளைபோல் சோதனைமேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் 200 சீட் இலக்கு நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை
பிறந்த நாளை கொண்டாட துப்பாக்கியால் ‘கேக்’ வெட்டியவர் கைது
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பதிவிறக்கம் : முடங்கியது ‘சிக்னல்’ செயலி
1966 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெளிநாட்டு தலைவர் பங்கேற்காத முதல் குடியரசு தின விழா : 25,000 பேர் மட்டுமே பங்கேற்பு
குறுகிய காலத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து சாதனை படைத்த இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு தலை வணங்குகிறேன் : பிரதமர் மோடி பெருமிதம்
உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தை இந்தியாவில் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்