தஞ்சையில் தொடக்கக்கல்வி இயக்குநர் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ரூ.1.25 கோடி மோசடி
2019-06-15@ 15:52:16

தஞ்சாவூர்: தொடக்கக்கல்வி இயக்குநர் கையெழுத்தை போலியாக போட்டு தஞ்சாவூர்,திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் ரூ.1.25 கோடி மோசடி செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1995 முதல் 1998 வரை இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் விதிகளுக்கு புறம்பாக 42 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் 1995 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் அவர்களின் நியமனம் செல்லாது என உத்தரவிட்ட தொடக்க கல்வி இயக்குனரகம் 2003 ஜூன் முதல் பணிநியமனம் வழங்கி, அன்று முதல் சம்பளத்தை கணக்கிட்டு வழங்க உத்தரவிட்டது. இந்த நிலையில் 42 ஆசிரியர்களில் 12 பேருக்கு அவர்கள் பணிநியமனம் செய்யப்பட்ட 1995 முதலான காலத்தை கணக்கில் கொண்டு 1.25 கோடியை சம்பளமாக வழங்க தொடக்க கல்வி இயக்குனரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ஒரு உத்தரவை தயாரித்து தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலரே அரசு கருவூலத்துக்கு அனுப்பியது தெரிய வந்துள்ளது.
2003-ல்நடந்த மோசடி 16 ஆண்டுக்கு பிறகு தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மோசடி செய்த 12 ஆசிரியர்களிடம் இருந்து ரூ.1.25 கோடியை பெற்றுத்தர தஞ்சாவூர், திருவாரூர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
25 சண்டை கோழிகள் திருட்டு
அம்மன் தாலி திருட்டு
அதிகாரி வீட்டில் கொள்ளை
வீட்டில் அதிசயங்கள் நடக்கும்’ என்று மந்திரவாதி கூறியதால் 2 மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே பேராசையால் கொடூரம்
போரூர் சுங்கச்சாவடி மீது தாக்குதல் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 6 பேர் கைது
ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை: கணவன் கைது
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்