SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை கூட்டத்துக்கு முன்னாடி நடந்த காசு, பணம், துட்டு, மணி மேட்டரை சொல்கிறார் wiki யானந்தா

2019-06-12@ 00:42:54

‘‘என்ன விக்கி பணமழை, பதவி மழை கொட்டோ கொட்டுனு கொட்டுவது போல இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நானும் கேள்விப்பட்டேன். இலை கட்சியின் முக்கிய கூட்டத்தில் யார் யார் வில்லங்கமா கேள்விகளை கேட்பார்கள் என்ற லிஸ்ட்... கிப்ட் தரப்புடன் உள்ள தொடர்பு... தேனியுடன் உள்ள ரகசிய தொடர்பு. ஆதரவாளர்கள் பட்டியல் எல்லாம் எடுத்து ரெடியாக வைச்சு இருக்காங்களாம். அந்த பட்டியலில் உள்ளவர்களை தங்கள் ஆட்கள் மூலமும் சென்னைக்கு வரவழைத்தும் ஒரு தரப்பு பேசி இருக்கு. அதில் வாரிய தலைவர், உள்ளாட்சி தேர்தலில் முக்கிய பதவி, பணம், நிலம், கட்சி பதவி என்ன வேண்டுமோ அதை தருவோம். ஆனால் இலை கட்சியின் சேலம் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாம். முக்கிய நபர்களை மடக்க சேலம்காரரின் வலதுகரமாக செயல்படும் அமைச்சர்களை தூதுவிட்டு சரிகட்டிட்டாங்க... அப்போதைக்கு சிலர் தலையாட்டினாலும் கூட்டம் நடக்கும்போது சேலத்தையும், தேனியையும் வெளுத்து வாங்க போறாங்களாம்.’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ அப்புறம்’’ ‘‘அதுல ஒரு குரூப் தேனிக்காரரைதான் அம்மா நியமிச்சாங்க... உங்களை சின்னம்மாதான் நியமிச்சாங்க... அவரை கட்சியில் இருந்து தூக்கிட்டோம். அவரால் நியமிக்கப்பட்ட உங்களை எப்படி ஏற்க முடியும். தமிழகத்தின் தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் மக்கள் இன்னும் உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அம்மாவால் அதிகம் சுட்டிக்காட்டப்பட்ட நபரான தேனிக்காரரைத்தான் மீண்டும் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் திட்டம் வைத்து இருக்கிறார்களாம். தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதை போல காட்டினாலும் அடிமட்டத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டத்தில் இந்த ஒருங்கிணைப்பை ஏற்காமல் உள்ளனர். இதனால்தான் மிகப்ெபரிய ேதால்வியை கட்சி சந்தித்தது என்றும் பேசிக் கொள்கிறார்கள். இது எல்லாம் கூட்டத்தில் வெடிக்கலாம்... என அவர்கள் பேசி சிரித்து கொள்வதை சொன்னார் விக்கியானந்தா.

‘‘கிப்ட் தரப்பு என்ன நினைச்சுட்டு இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஒற்றை தலைமை... அது சிறை பறவைதான் என்கிற கோஷத்தை ஸ்லீப்பர் செல்கள் மூலம் அந்த கூட்டத்தில் எழுப்ப ஆட்களை தயார் செய்து வைத்துள்ளாராம் கிப்ட். ஆனால் அவர்களையும் சேலம் தரப்பு அடக்கி வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் இவர்கள் கிப்ட் தரப்பிடம் பல லகரங்களை வாங்கியதற்காக பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களாம். இலை கூட்டத்தில் சிறைப்பறவை பெயர் அடிபட வேண்டும். இரட்டை தலைமைக்கு மாற்று சிறைபறவை என்பதை சொல்ல வேண்டும் என்று சிலருக்கு கட்டளை போய் இருக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முக்கிய நிர்வாகிகளின் மனநிலை எப்டி இருக்கு...’’
‘‘மத்திய அமைச்சரை சந்திக்கப்ேபாகிறேன் என்ற பெயரில் ஒரு அமைச்சர் டெல்லிக்கு சென்று முகாமிட்டுள்ளார். கிண்டிக்காரர் போய் இருக்கும் நிலையில் டெல்லியில் இருந்து வந்த போன் அடிப்படையில்தான் அந்த அமைச்சர் போனதாக தகவல் ஓடுது.. அப்படியே கூட்டத்தை பற்றியும் எதிர்கட்சிகளின் நிலை பற்றியும் பேச உள்ளார்களாம். குறிப்பாக ஷாவிடம் தேனியை பற்றி ஒரு முக்கிய தகவலை சொல்லிவிட்டு வரத்தான் அவர் சென்றதாக தகவல் ஓடுது. அதை அந்த அமைச்சரே நேரடியாக சொன்னால்தான் உண்டு. அப்புறம், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்றால் ஆட்சியும் கட்சியும் இப்போது இருக்கும் நிலையிலேயே இருக்க வேண்டும். மாதம் வருவது நிற்க கூடாது. இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்கு பங்கம் வரக்கூடாது. கட்சியை ஸ்டிராங்க் பண்ணிவிட்டு உள்ளாட்சி தேர்தலை சந்தித்து எப்படியாவது ஜெயித்து நம் ஆட்களை பதவியில் உட்கார வைக்க வேண்டும். அதுவரை தாமரையை ஒதுக்கி வைக்க வேண்டும். இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்பதை டெல்லிக்கு புரிய வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்களாம். அவர்களுக்கு இப்போதைக்கு ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என்ற எண்ணமே இல்லையாம். எப்படி சம்பாதிப்பது என்ற நிலையில்தான் இருக்காங்களாம். அதனால யார் பவர்புல்லாக இருக்கிறாரோ அவர் பக்கம் இவர்கள் சாய்வார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாஜி எம்எல்ஏ சகோதரரின் டார்ச்சர் தாங்க முடியலையாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்தோட அரசு ஆஸ்பத்திரி டீன் போன வருசம் ஓய்வுபெற்றார். இதனால, மாஜி அதிமுக எம்எல்ஏவோட சகோதரருக்கு அந்த பொறுப்பை முழு அதிகாரத்தோட கொடுத்தாங்க. அதிகாரத்த முழுசா பயன்படுத்திக்கிட்ட அவரு, பல விவகாரங்கள்ல ஆஸ்பத்திரியோட வழக்கத்த இஷ்டம்போல மாத்திகிட்டாரு. குறிப்பாக, டாக்டருங்களுக்குனு இருந்த கேன்டீன, எல்லாரும் பயன்படுத்திக்குங்கனு தாராள மனச காட்டுனாரு. இதுக்காக சம்பந்தப்பட்ட கேன்டீன் நிர்வாகத்துகிட்ட ‘கையை''யும் நீட்டியிருக்காரு. சமீபத்துல புதுசா வந்த டீன் கிட்ட, பொறுப்புல இருந்தவரு பத்தி பல குற்றச்சாட்டுகள முன்வச்சாங்க. அதுல இந்த கேன்டீன் மேட்டரையும் டாக்டர்கள் சார்பா சேர்த்துவிட்டாங்க. இதனால், அதிருப்தியடைஞ்ச புது டீன், என்ன பண்றதுனு தெரியாம யோசிக்கறாராம். ஆளும்கட்சி சப்போர்ட் இருக்குறதால என்னால எதுவும் முடியாதுனு, சக டாக்டருங்க கிட்ட விரக்தியோட புலம்பிகிட்டு இருக்காராம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்