உயர், குறைந்த மின்அழுத்த பிரச்னையால் பல இடங்களில் மின்னணு சாதனங்கள் நாசம்: ஒற்றைக்கம்ப மின்மாற்றி திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
2019-06-09@ 00:09:44

சென்னை: நீடித்து வரும் உயர் மற்றும் குறைந்த மின்அழுத்த பிரச்னையால் பல இடங்களில் மின்னணு சாதனங்கள் நாசமடைந்து வருகிறது. இதைத்தடுக்கும் வகையில் ஒற்றைக்கம்ப மின்மாற்றி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏராளமான மின் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில் சமீபகாலமாக பலஇடங்களில் மின்தடை மற்றும் குறைந்த மின் அழுத்தம் சம்பந்தமான பிரச்னைகள் நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள குப்பம் ஒன்றில் தீப்பிடித்து குடிசை வீடுகள் எரிந்து நாசமானது. இதற்கு மின் அழுத்தம் காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போது சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடித்தது. பொதுமக்கள் எச்சரிக்கையாக செயல்பட்டதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பெரம்பலூர், கோனேரிப்பாளையம் பகுதியில் குறைந்த மின்அழுத்தம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்டது.
அப்போது மின்மோட்டார், கிரைண்டர், மிக்ஸி, ஏசி உள்ளிட்ட சாதனங்கள் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மக்கள் அங்குள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலூரில் இதுபோன்ற சிக்கல் ஏற்பட்டதால் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச்செய்தனர். இதேபோல் கோவை, திருச்சி, சேலம், மதுரை என பல இடங்களில் குறைந்த மற்றும் உயர் மின் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் ெபாதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மின்னணு சாதனங்கள் பழுதடைவதால், அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அவர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். ஆனால் வாரியம் நடவடிக்கையை துரிதப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பல இடங்களில் குறைந்த மின்அழுத்தம் மற்றும் உயர் மின் அழுத்தம் சம்பந்தமான பிரச்னை நீடித்து வருகிறது. உயர் மின் அழுத்தம் ஏற்படுவதற்கு டிரான்ஸ்பார்மரில் இருந்து நேரடியாக கம்பங்கள் மூலமாக மின்சாரம் விநியோகம் செய்வதே காரணம். இவ்வாறு செய்யும் போது அதிகமான மின்சாரம் சில நேரங்களில் பயணிக்கிறது. அது வீட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் மின்னணு சாதனங்களுக்கு சென்றடையும் போது, அந்த சாதனங்களுக்குள் இருக்கும் கருவிகள் அதை தாங்கும் சக்தி கொண்டதாக இருப்பதில்லை. இதனால் உடனடியாக அவை செயலிழந்து விடுகிறது. சில நேரங்களில் வெடித்தல், தீப்பிடித்தல் போன்ற பிரச்னையும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒற்றைக்கம்ப மின்மாற்றி திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் மின்னணு சாதனங்களுக்கு எவ்விதமான பிரச்னையும் ஏற்படாது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
அமித்ஷா கையில் தலையாட்டி பொம்மை: ப.சிதம்பரம் கிண்டல் ட்வீட்
தொடரும் இழுபறி!: தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை..!!
பாலியல் சர்ச்சை விவகாரத்தில் சிறப்பு டிஜிபிக்கு உதவிய உயர் அதிகாரிகள்: முதல் தகவல் அறிக்கையில் அம்பலம்
சட்டமன்ற தேர்தல் 2021!: அதிமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 4ம் தேதி முதல் நேர்காணல்...ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவிப்பு..!!
3 மாதங்களில் 225 உயர்வு: காஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
பெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: சிறப்பு டிஜிபி மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீதும் பாய்ந்தது வழக்கு: விசாரணை அதிகாரியாக எஸ்பி. முத்தரசி நியமனம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்