SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.2 லட்சம் மயில்தோகை பறிமுதல்

2019-05-16@ 00:34:05

சென்னை: சென்னையில் இருந்து நேற்று அதிகாலை  3.30 மணிக்கு கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள்  சோதித்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகைதீன்  (30) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு செல்ல வந்தார்.

அவர், பெரிய பூக்கூடை வைத்திருந்தார். அதில் கட்டுக்கட்டாக 1000 மயில்தோகைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. உடனே அவற்றை பறிமுதல் செய்து முகைதீனின் பயணத்தையும் ரத்து செய்தனர். விசாரணையில், காட்டுப்பகுதியில் வசிக்கும் மயில்களின் இறகுகள்  இயற்கையாக உதிர்ந்தபோது அவற்றை சேகரித்து வருவதாக அவர் கூறினார். வெளிநாடுகளில் மயில்தோகைக்கு வரவேற்பு உள்ளதால் மயில்களை கொன்று இறகுகளை கொண்டு வந்திருக்க வேண்டும்.

அதுவும் இவ்வளவு மயில் தோகைகள் ஒரே நேரத்தில் உதிர்ந்திருக்காது என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்தது. நம் நாட்டில் இந்த மயில்தோகையின் மதிப்பு சில ஆயிரம்தான். ஆனால் சர்வதேச அளவில் சிங்கப்பூரில் இதன் விலை ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. எனேவ வனத்துறை அதிகாரிகளிடம் அவற்றை ஒப்படைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்