SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ஆறு என்பதற்கான அடையாளமே தெரியவில்லை புதர்களால் மண்டி கிடக்கும் மருதையாறு மீட்டெடுக்கப்படுமா?

2019-05-15@ 14:16:32

பெரம்பலூர்: மண்டிக் கிடக்கும் புதர்களால் ஆறு என்பதற்கான அடையா ளமே தெரியாமல் கிடக்கும் மருதையாற்றை. பொறுப்புடன் மீட்டெடுக்க பொதுப்பணி த்துறை முன்வர வேண்டும் என பெரம்பலூர் மாவ ட்ட விவசாயிகள் ,சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ளது பெரம்பலூர் மாவட்டம். மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சை மலைத் தொடர்ச்சியிலிருந்து, கல்லாறு, கோரையாறு, மருதையாறு, கோனேரி ஆறு, ஸ்வேதா நதியெனப் பல்வேறு ஆறுகள் உற்பத்தியானாலும், பொதுப்ப ணித்துறையின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் இருந்தாலும், பெரம்பலூர் மாவட்டம்கிணற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி யுள்ள மானாவாரி சாகுபடியாளர்களை கொண்ட பூமியாகும். இருந்தும் வேப்பந்தட்டை தாலுக்காவில் விசுவக்குடி அருகேயிருந்து உற்பத்தி யாகி வரும் கல்லாற்றின் குறுக்கே விசு வக்குடி அணைக்கட்டுத் திட்டம் செயல்ப டுத்தப்பட்டுள்ளது போல், கீழக் கணவாய், செல்லியம்பாளையம் ஆகியப் பகுதிக ளிலிருந்து , உற்பத்தியாகி வரும் மருதை ஆற்றின் குறுக்கே கொட்டரை நீர்த்தே க்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் ஆலத்தூர் தாலுக்கா, கொட்ட ரை என்ற இடத்தில் ரூ56.7 கோடி மதிப்பி ற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ரூ 67.5 கோடி மதிப்பிற்கு புதிய அணைக்கட்டு மருதையாற்றின் குறுக்கே கட்டப்ப ட்டு வருகிறது. மொத்தத்தில் ரூ124.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் கொ ட்டரை நீர்த்தேக்கம் முழுமையாக நம்பி இருப்பது இங்குள்ள மருதையாறு ஒன்றைத்தான். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பச்சை மலைத் தொடர்ச்சியிலிருந்து கிழக் கண வாய் செல்லியம்பாளையம் ஆகிய பகுதி களில் உற்பத்தியாகும் இந்த மருதையாறு, பெரம்பலூர் மாவட்டத்தில் 45 கிமீ தூரமும், அரியலூர் மாவ ட்டத்தில் 30 கிமீ தூரமும் என 75 கிமீ தூரம் பயணித்து அரியலூர் மாவட்டம் வைப்பூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் சங்கமிக்கிறது. ஏறக்குறைய 75 கிமீதூரம் பயணிக்கும் இந்த மருதையாற்றுக்கு எந்த வழித்தடமும் சீராக இல்லாமல் மண்மேடுகள் நிரம்பி புதர்கள் மண்டி காணப்படுவது வேதனை அளிக்கிறது. இதனால் மருதையாறு தனது ஆற்றுக்கு உரிய அடையாளமே இல்லாமல் அனாதையாக கிடக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு கிளை ஆறுகள் ஒன்று சேர்ந்து மருதையாற்றுக்கு நீர்ப்பெருக்கை ஏற்ப டுத்துவதுண்டு. ஆனால் முறையாக சீர மைத்து பராமரிக்கப்படாத காரணத்தால் தற்போது மருதை ஆற்றில் தண்ணீர் வந்தால் கூட, சரியான வழித்தடத்தில் தண்ணீர் செல்ல முடியாமல், தானாக ஆங்காங்கே உடைப்பெடுத்துக்கொண்டு கிளைஆறுகளை உற்பத்தி செய்து வயல் களை சீரழிக்கும் அவல நிலையில் தான் மருதையாறு உள்ளது. குறிப்பாக பச்சை மலைத் தொடர்ச்சியிலிருந்து உற்பத்தி யாகும் மருதையாறு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்பாடி பிரிவு ரோடு அருகே வரும் வரை மட்டுமே அதற்குரிய சிறிதளவான அடையாள த்தைக் கொண்டுள்ளது. அதனைக் கடந்துசெல்லும் வழித்தடத்தில் ஆற்றின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு கார ணமாக ஆறு என்பது சுருங்கி ஓடையாக காணப்படுகிறது. மேலும் பலஇடங்களில் மண்மேடுகள் புதர்கள் மண்டிக் கிடப்ப தால் மழை நீர் பெருக்கெடுத்தாலும் மண்மேடுகள் மறிப்பதால் அருகிலுள்ள வயல்களில் வழிந்தோடி 100 கோடிக்கு மேல் செலவு செய்து கட்டப்பட்டு வரும் கொட்டரை நீர்தேக்கத்திற்கு செல்லுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்னாறு உப வடிநிலக் கோட்டம் என்பதுபோல் மருதை யாறு உப வடிநிலக் கோட்டம் என இரு பிரிவுகளாக பராமரித்து வரும் பொதுப்ப ணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு அலங்காரத்திற்காக வெறும் அணைக்கட்டுகளை மட்டும் கட்டிவைத்து காத்திருக்காமல், அதில் மழை நீரை சேகரிக்க வேண்டிய அவசியத்தில் மருதையாற்றின் வழித்தடங்களைச் சீரமைக்க வேண்டுமென விவசாயிகள், சமூக ஆர்வ லர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்