மாஸ்கோ உக்ரைன் நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு 2,000 ரூபாய் அபராதம்
2019-05-14@ 12:37:55

மாஸ்கோ: மாஸ்கோ உக்ரைன் நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தன் ஓட்டுச்சீட்டை பத்திரிகைகளுக்கு காட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. அந்நாட்டு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலமடைந்த வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இம்மாத இறுதியில் அதிபராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் ஓட்டுப் போடும் போது அவரை படமெடுத்த பத்திரிகை மற்றும் 'டிவி' கேமராக்களுக்கு அவர் ஓட்டுச்சீட்டு தெரியுமாறு, 'போஸ்' கொடுத்ததாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து உள்ளூர் நீதிமன்றத்தில் தன் செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்டதை அடுத்து, அவருக்கு 2,000 ரூபாய் மதிப்பில் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியாக உயர்வு: 21.64 லட்சம் பேர் உயிரிழப்பு
நாயிடம் பால் குடிக்கும் பூனைக்குட்டி..! வைரலாகும் வீடியோ...
இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஆவலாக இருந்தேன்...ஆனால் கொரோனா என்னை தடுத்துவிட்டது : இங்கிலாந்து பிரதமர் உருக்கம்
உருமாறிய கொரோனாவையும் எதிர்க்கும்...! தற்போதுள்ள தடுப்பூசியை மேலும் வீரியம் மிக்கதாக உருவாக்க பரிசோதனைகள்: மாடர்னா நிறுவனம்
உலகத்தை மிரட்டி வரும் கொரோனா..! பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.48 லட்சம் பேர் உயிரிழப்பு
ஒரே நேரத்தில் 143 செயற்கைகோளை ஏவி உலக சாதனை படைத்தது ஸ்பேஸ்எக்ஸ்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!