வழிப்பறி ஆசாமிக்கு மக்கள் தர்ம அடி
2019-05-13@ 00:39:26

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த விஜயலட்சுமி (36), நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி ராமலிங்கம் கோயில் அருகே மொபட்டில் சென்றபோது, ஆசாமி ஒருவர், இவரது கைப்பையை பறித்துக்கொண்டு தப்ப முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், வியாசர்பாடி காந்திபுரத்தை சேர்ந்த விநாயகம் (22) என்பது தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்து செல்போன், ₹1500 பறிமுதல் செய்யப்பட்டது.
* நெற்குன்றம் பெருமாள் கோயில் 9வது தெருவை சேர்ந்த சரவணன் (24). எலக்ட்ரீஷியன். இவர் நேற்று முன்தினம் இரவு நெற்குன்றம் ஜெயலட்சுமி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வயரிங் வேலை செய்தபோது, மின்சாரம் பாய்ந்து இறந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, கட்டிட மேஸ்திரி ராமசாமி என்பவரை கைது செய்தனர்.
* புளியந்தோப்பு திரு.வி.க. தெருவை சேர்ந்த முகமது கவுஸ் (40) நேற்று வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றபோது லாரி மோதி இறந்தார்.
* அயனாவரம் பரசுராமர் ஈஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (50), அதே பகுதியில் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது கடை பூட்டை உடைந்து உள்ளே இருந்த ₹10,000, மூன்று விலை உயர்ந்த செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
* சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரமேஷ்பாபு (41), நேற்று முன்தினம் இரவு தனது மனைவி ஜெயப்பிரதா (38) என்பவருடன், பைக்கில் போரூர் ஏரி அருகே சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த 2 பேர், ஜெயப்பிரதா அணிந்திருந்த 13 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
* முகப்பேர் கிழக்கு ஜானகி கார்டன் சர்ச் சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார் (43). இவரது மகன்கள் சந்தோஷ் (எ) பழனியப்பன் (16), சஞ்சய் சரவணன் (15) ஆகியோர் சரிவர படிக்கவில்லை என்று செந்தில்குமார் திட்டியதால், அவரது ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து மாயமாகினர்.
மேலும் செய்திகள்
25 சண்டை கோழிகள் திருட்டு
அம்மன் தாலி திருட்டு
அதிகாரி வீட்டில் கொள்ளை
வீட்டில் அதிசயங்கள் நடக்கும்’ என்று மந்திரவாதி கூறியதால் 2 மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே பேராசையால் கொடூரம்
போரூர் சுங்கச்சாவடி மீது தாக்குதல் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 6 பேர் கைது
ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை: கணவன் கைது
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!