SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் ரூ.639 கோடிக்கு மது விற்பனை டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

2019-04-17@ 12:56:06

சென்னை: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், நேற்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நாளொன்றுக்கு 80 முதல் 90 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடைபெறும். தேர்தல் நெருங்கிய நிலையில் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவலின்படி, கடந்த 15ஆம் தேதி இரவு முதல் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியதாகவும் 4 நாட்களுக்குத் தேவையான மதுபானங்களை போட்டிப் போட்டுக்கொண்டு மதுபிரியர்கள் வாங்கிச் சென்றதாக தெரிவித்தார்.

மேலும் நான்கு நாட்களில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 139 கோடி ரூபாய்க்கும், சென்னையில் 136 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்ததாக, திருச்சியில் 133 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 120 கோடி ரூபாய்க்கும், கோவையில் 111 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன என்று தகவல் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் ரூ.639 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறி மதுபானங்கள் விற்பனை நடைபெறுகிறதா என காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்