உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பு: மோடியின் பிரசார மேடையில் தீ: 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் மீது வழக்கு
2019-04-15@ 20:38:19

அலிகார்: பிரதமர் மோடி அலிகாரில் நடந்த தேர்தல் பிரசார மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் பரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் நேற்று பிரதமர் மோடி, பாஜ வேட்பாளர்களை ஆதரித்து மேடையில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியிலிருந்து செல்லும் வயரில் திடீரென தீ ஏற்பட்டது. தொடர்ந்து மோடியின் பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக அந்த தீயை அணைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில், மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மேடை ஏற்பாட்டாளர்கள் 3 பேர் மீதும், மின்வாரியத்தைச் சேர்ந்த 2 அலுவலர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, சீனியர் போலீஸ் எஸ்பி ஆகாஷ் குல்கரி கூறுைகயில், ‘‘குளிர்சாதன பெட்டியில் இருந்து சென்ற வயர், ஓவர் ஹீட் ஆனதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மற்றபடி எவ்வித அசம்பாவிதமும் இல்லை’’ என்றார்.
மேலும் செய்திகள்
ஐஐடியில் சமஸ்கிருத திணிப்பு பாஜ கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை
எம்ஜிஆரின் 104வது பிறந்தநாளில் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக களப்பணியாற்ற சபதம் ஏற்போம்: அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம்
செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் உள்பட 7 சட்டமன்ற தொகுதி தேர்தல் நடுநிலையோடு நடக்குமா? அதிமுக மாவட்ட செயலாளர் போல் கலெக்டர் செயல்படுகிறார்
டிடிவி.தினகரன் ட்விட் கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது?
குருமூர்த்தியின் அநாகரிக பேச்சை அதிமுக கண்டிக்காதது ஏன்? திமுக சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம் கேள்வி
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல் அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்கள் கலக்கம்: கன்னியாகுமரி இடைத்தேர்தலிலும் அதிமுகவே களமிறங்க திட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்