SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துறைமுகம் பகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண்பேன்: திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் உறுதி

2019-04-13@ 03:41:46

சென்னை: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று காலை சென்னை துறைமுகம் கிழக்கு பகுதிக்கு உட்பட்ட சைவ முதலி தெரு, சாலை விநாயகர் கோயில் தெரு, திருவள்ளுவர் நகர் குடிசை பகுதி, ஆவுடையப்பன் தெரு, பி.கே.என்.கார்டன், வள்ளுவர் நகர், ஆசிர்வாதபுரம், அப்பாராவ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.  அப்போது அவருக்கு, பொதுமக்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  குடிசைகள், ஓட்டல்கள், தெருவோர கடைகளில் தயாநிதி மாறன் வாக்கு சேகரித்தபோது, அங்கிருந்தவர்கள் கைகுலுக்கி, 'எங்கள் ஓட்டு உங்களுக்குதான்' என்று உற்சாகம் பொங்க கூறினர். சிலர், தங்களது குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்படி தயாநிதி மாறனிடம் கூறினர். இதையடுத்து அவர் ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டினார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்து சென்று வாக்கு சேகரித்த அவரை மக்கள் பாராட்டினர்.

அப்போது தயாநிதி மாறன் பேசியதாவது:  பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உலக நாடுகளை மட்டுமே சுற்றிப்பார்த்த மோடி, தன் சொந்த நாட்டு மக்களை கண்டுகொள்ளவில்லை.  சென்னையில் தண்ணீர் இல்லாமல் மக்கள் தெரு தெருவாக அலையும் நிலை உள்ளது. இதனைப்போக்கும் விதமாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்து, குடிநீர் பிரச்னையை தீர்ப்போம். தமிழக அரசு கடந்த 8 ஆ்ண்டுகளில் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. மோடியிடம் தமிழகத்தை அடகு வைத்து ஆட்சி செய்கிறார் எடப்பாடி. அவரை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது.
நான் வெற்றி பெற்றவுடன் சென்னை துறைமுக பகுதி மக்களின் அடிப்படை  பிரச்னைகளை தீர்த்து வைப்பேன்.

குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை  பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண்பேன். தமிழகத்தில் நல்லாட்சி மலர உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.  வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ, பகுதி செயலாளர் முரளி, ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் போஸ், பொதுக்குழு உறுப்பினர் விஜயக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-school-beach

  ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

 • 19-04-2021

  19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2021

  18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • niger-scl-15

  நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

 • maharastra-15

  தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்