SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

8 வழிச்சாலை வழக்கில் திமுக வக்கீல் ஆஜரானதாக பொய் தகவல் அன்புமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ்

2019-04-11@ 00:52:20

சென்னை: சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கில் மூத்த வக்கீல் பி.வில்சன் சாலை திட்டத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்தில் வாதம் செய்தார் என்ற பொய்யான அறிக்கையை வெளியிட்ட அன்புமணி ராமதாசுக்கு மூத்த வக்கீல் பி.வில்சன்  சார்பில் திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்து.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., திமுக சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன், வக்கீல் இரா.நீலகண்டன் ஆகியோர் அன்புமணி ராமதாசுக்கு அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில் கூறியிருப்பதாவது:

சென்னை - சேலம் எட்டு வழி பசுமை திட்ட சாலை வழக்கில், திட்டத்திற்கு ஆதரவாக திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானதாக, உண்மைக்கு மாறான தகவலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். இது பத்திரிகை மற்றும் ஊடகங்களில் கடந்த 9ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த பொய்யான அறிக்கை மூத்த வக்கீல் பி.வில்சன் நற்பெயருக்கும், தி.மு.க.வின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கின்ற வகையில் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.  

சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கில் திமுக தலைமைக் கழக மூத்த வக்கீல் பி.வில்சன் எந்த தரப்பினருக்கும் ஆஜராகவில்லை என்பதை சரிவர தெரிந்துகொள்ளாமல் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். எனவே, இந்த தவறான அவதூறு பரப்பும் தகவலை 48 மணி நேரத்திற்குள் அன்புமணி ராமதாஸ் திரும்பப் பெறவேண்டும். தவறான தகவலை தெரிவித்ததற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்பு கோராத பட்சத்தில் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்