அமைதிப்படையில் பார்த்தது போல தமிழகத்தில் 2 அமாவாசைகள்: சி.ஆர்.சரஸ்வதி செம கலாய்
2019-04-07@ 03:59:26

விருதுநகர் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் பரமசிவம் அய்யப்பனுக்கு ஆதரவாக நடிகை சி.ஆர்.சரஸ்வதி அருப்புக்கோட்டையில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது: மோடியா, லேடியா என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேட்டார். அந்த மோடியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டாடியாக தத்தெடுத்து உள்ளார். பாஜவினர் கோபிப்பார்கள் என்பதற்காக, ஒரு இஸ்லாமியருக்கு கூட அதிமுக சீட் கொடுக்கவில்லை. இபிஎஸ்சும். ஓபிஎஸ்சும் மோடியின் அடிமைகளாக உள்ளனர். பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் மூடப்பட்டு அம்பானி, அதானியிடம் கைமாறப் போகிறது. அம்பானி, அதானி, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்காக மோடி அரசு செயல்படுகிறது. ஏழைத்தாய் மகன் என கூறும் பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 15 லட்சத்திற்கு உடை அணிகிறார். மாதத்தில் 15 நாட்கள் வெளிநாட்டில் உள்ளார். காதில் மைக் பொருத்தி பேசும் ஹைடெக் முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
சசிகலா குடும்ப அரசியல் என செய்கிறார் என துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் செய்தார். ஆனால், ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார், ராஜன்செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் மகன்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர். இது குடும்ப அரசியல் இல்லையா? தமிழகத்தில் 2 அமாவாசைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார். அமைதிப்படை படத்தில் ‘அமாவாசை’ என்ற கேரக்டர், பவ்யமாக நடித்து அரசியலில் பெரிய பதவியை பெறுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதைத்தான் சி.ஆர்.சரஸ்வதி குறிப்பிட்டு, தற்போதைய ஆட்சியில் உள்ளவர்களை கிண்டலடித்து பேசியிருக்கிறார்.
மேலும் செய்திகள்
பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு
பொதுக்குழு கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆதரவாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை
வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு உறுதி பணம் கொடுப்பதாக மீண்டும் சொன்னால் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு: மாஜி அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி
சசிகலா 3 நாட்கள் சுற்றுப்பயணம்: ஆதரவாளர்களை சந்திக்கிறார்
காவல் துறையில் துணை ராணுவத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: தேமுதிக வேண்டுகோள்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!