அசாம் கான் மிரட்டல் காரணமாக ராம்புரை விட்டுச் சென்றேன்: மேடையில் கண்ணீர் விட்ட நடிகை ஜெயப்பிரதா
2019-04-04@ 12:59:51

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ராம்புர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். பிரபல நடிகை ஜெயப்பிரதா கடந்த 1994-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். சந்திரபாபு நாயுடுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2004-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். ஆனால் அவருக்கும் அவருக்கு நெருக்கமான அமர்சிங்குக்கும் பெரிய அளவில் அந்த கட்சியில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஜெயப்பிரதா திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.
அதுமட்டுமின்றி இணைந்த கையோடு அவருக்கு ராம்பூர் தொகுதியில் போட்டியிட சீட்டும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய நடிகை ஜெயப்பிரதா, தாம் ராம்புரை விட்டுச் செல்ல விரும்பவில்லை என்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அசாம் கான் குண்டர்களை ஏவி தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறிய ஜெயப்பிரதா தமது முகத்தில் ஆசிட் வீசிவிடுவார்கள் என்ற அச்சத்தால்தான் ராம்புரை விட்டுச் சென்றதாக கண்ணீர் விட்டு கூறினார்.
மேலும், பிறந்தநாள் பரிசாக இந்தத் தொகுதியில் தமக்குப் போட்டியிட பாஜக வாய்ப்பளித்ததாக நன்றி தெரிவித்தார். 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் சமாஜ்வாதி வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற ஜெயப்பிரதா இம்முறை அவரின் பரம எதிரியான சமாஜ்வாதி வேட்பாளராகப் போட்டியிடும் அசாம் கானை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு
பொதுக்குழு கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆதரவாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை
வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு உறுதி பணம் கொடுப்பதாக மீண்டும் சொன்னால் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு: மாஜி அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி
சசிகலா 3 நாட்கள் சுற்றுப்பயணம்: ஆதரவாளர்களை சந்திக்கிறார்
காவல் துறையில் துணை ராணுவத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: தேமுதிக வேண்டுகோள்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!