SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகுல் காந்தி இன்னும் அமுல் பேபியாகவே இருக்கிறார்: கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் விமர்சனம்

2019-04-02@ 10:16:59

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்னும் அமுல்பேபியாக இருப்பதாக கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி நாடாளுமன்ற தொகுதியை தொடர்ந்து கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடுவது ஆச்சியம் இல்லை என்றும் ராகுல் காந்தி பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து போட்டியிடவில்லை என்று தெரிவித்தார். மேலும் இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ் அச்சுதானந்தன், தனது முகநூலில் ராகுல் காந்தி இன்னும் அமுல் பேபியாக இருப்பதாக பதிவிட்டுள்ளார்.கடந்த 2011-ம் ஆண்டு கேரள சட்டமன்ற தேர்தலின்போது ராகுல் காந்தியின் நடவடிக்கை முதிர்ச்சி பேராமல் இருந்ததால், அப்போது அமுல் பேபி என்று அழைத்ததாக தெரிவித்த அச்சுதானந்தன், நடுத்தர வயதை எட்டியுள்ள நிலையில் அவரது நடவடிக்கைகள் மாறவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்