இந்தியா ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் கிடாம்பி, காஷ்யப்
2019-03-30@ 04:25:00

புதுடெல்லி: இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட இந்திய வீரர்கள் கிடாம்பி காந்த், பாருபள்ளி காஷ்யப் தகுதி பெற்றனர். கால் இறுதியில் சக வீரர் சாய் பிரனீத்துடன் மோதிய காந்த் 21-23, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் 62 நிமிடம் போராடி வென்றார். அவர் கடைசியாக விளையாடிய 9 தொடர்களில் 8 முறை கால் இறுதியுடன் வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு கால் இறுதியில் காஷ்யப் 21-16, 21-11 என்ற நேர் செட்களில் சீன தைபே வீரர் வாங் ட்ஸூ வெய்யை வீழ்த்தினார். காஷ்யப் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் சீரிஸ் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2 இந்திய வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது பதக்க நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள்
மான்ட்பெல்லியர் ஓபன் டென்னிஸ்: டேவிட் காபின் சாம்பியன்
59 மணி நேரம் கேரம் விளையாடி சென்னை வீரர்கள் கின்னஸ் சாதனை
இன்று முதல் எழும்பூரில் மீண்டும் கைப்பந்து போட்டி
ஐஎஸ்எல் அரை இறுதி மார்ச் 5ல் தொடக்கம்: ‘லீக் வின்னர்’ மும்பை
விஜய் ஹசாரே டிராபி விதர்பாவை வீழ்த்தியது தமிழகம்
ஐசிசி டெஸ்ட் தரவரிசை 3வது இடத்துக்கு முன்னேறினார் அஷ்வின்: முதல் முறையாக ரோகித் 8வது ரேங்க்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்