2018-19ம் நிதியாண்டில் 11,513 கோடி இலக்கை அடைய கவனம் செலுத்த வேண்டும்: துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கு அமைச்சர் உத்தரவு
2019-03-08@ 02:04:04

சென்னை: 2018-19 நிதியாண்டில் பதிவுத்துறைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கான 11,513 கோடியை முழுமையாக அடைவதற்கு முழு கவனம் செலுத்த அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி உத்தரவிட்டுள்ளர். வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து நேற்று பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்தில் சீராய்வுக் கூட்டம் நடந்தது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர், பதிவுத்துறைத் தலைவர், அனைத்து கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள், அனைத்து மண்டல துணைத்தலைவர்கள் மற்றும் பதிவுத்துறை தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், 2018-19 நிதியாண்டில் பதிவுத்துறைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கான 11 ஆயிரத்து 513 கோடியை முழுமையாக அடைவதற்கான முயற்சியில் முழு கவனம் செலுத்த அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கும் அமைச்சர் உத்தரவிட்டார். ஆவணங்கள் பதிவு நாளன்று திரும்ப வழங்கியுள்ளனரா என்பது குறித்து அமைச்சர் சீராய்வு செய்தார். சீட்டு மத்தியஸ்த வழக்குகளை விரைந்து முடிக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகள்
கடன் வாங்காத மாநிலமே இல்லை: பல்வேறு சோதனைகளைத் தாண்டி 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளேன்...முதல்வர் பழனிசாமி பேட்டி.!!!
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!!
தா. பாண்டியனின் வாழ்க்கையும், அனுபவங்களும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் : முதல்வர் பழனிசாமி புகழஞ்சலி!!
அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும்,செயல்பட்டும் வந்தவர் தா.பாண்டியன்: ஓபிஎஸ், கமல், தினகரன் உள்ளிட்டோர் புகழாரம்!!
ஆஸ்கர் பந்தயத்தில் முன்னேறும் சூரரைப் போற்று... சிறந்த படம், நடிகர், நடிகை ஆகிய 3 பிரிவுகளில் பரிந்துரை: படக்குழுவினர் மகிழ்ச்சி!!
புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்: தா.பாண்டியன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!