டென்னிஸ் தரவரிசை டாப் 10ல் செரீனா
2019-02-19@ 00:23:35

அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (37 வயது), மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் மீண்டும் டாப் 10ல் இடம் பிடித்துள்ளார். நம்பர் 1 வீராங்கனையாக நீண்ட காலம் கொடிகட்டிப் பறந்த செரீனா, குழந்தை பெற்றுக் கொண்டு நீண்ட ஓய்வில் இருந்த காரணத்தால் தரவரிசையில் பின்னடைவை சந்தித்தார். ஒரு கட்டத்தில் 491வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நடப்பு சீசனில் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸி. ஓபனில் களமிறங்கி கால் இறுதி வரை முன்னேறினார். இந்த நிலையில், நேற்று வெளியான ரேங்கிங்கில் செரீனா 3406 புள்ளிகளுடன் 10வது இடத்தை பிடித்துள்ளார். ஜப்பானின் நவோமி ஒசாகா (6970), சிமோனா ஹாலெப் (ரோமானியா, 5537), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா, 5307) முதல் 3 இடங்களில் உள்ளனர்.
மேலும் செய்திகள்
விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா
மாஸ்டர்ஸ் மகளிர் உலக கோப்பை: இங்கிலாந்து செல்லும் இந்திய ஹாக்கி அணி
வங்கதேசத்துடன் 2வது டி20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
இந்தியாவுடன் 5வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 378 ரன் இலக்கு
ஷபாலி - மந்தனா அதிரடி ஆட்டம்: தொடரை வென்றது இந்தியா
வங்கதேசத்திற்கு எதிரான 2வது டி.20 போட்டி 35 ரன் வித்தியாசத்தில் வெ.இண்டீஸ் வெற்றி
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!