SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனைவிக்கு கொலை மிரட்டல் பாதிரியார் உட்பட 3 பேர் கைத

2013-04-20@ 00:29:34

பெரம்பூர் : வரதட்சணை கேட்டு சித்ரவதை மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக காதல் மனைவி அளித்த புகாரில், பாதிரியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வியாசர்பாடி, சாஸ்திரிநகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ஜோசப் (31). பாதிரியார். போரூர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தவர் ஆரோக்கிய இருதய கலையரசி (25). இருவரும் காதலித்தனர். நெருங்கி பழகியதால் கலையரசி கர்ப்பமானார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கலையரசி எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார் கலையரசி மற்றும் அந்தோணி ஜோசப் ஆகியோரை அழைத்து பேசியதும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு 3 மாத கருவை கலையரசி கலைத்து விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 7ம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கலையரசி ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கணவன் அந்தோணி ஜோசப், அவரது தந்தை அகஸ்டின், மைத்துனர் ஹென்றி மார்கஸ் ஆகியோர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு மேல் விசாரணைக்காக எம்.கே.பி.நகர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உதவி கமிஷனர் கோவி மனோகரன் மேற்பார்வையில் போலீசார் விசாரித்தனர். அப்போது வரதட்சணை கேட்டு கலையரசியை சித்ரவதை செய்ததும், போலீசுக்கு தகவல் கொடுத்ததால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வரதட்சணை, பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அந்தோணி ஜோசப் மற்றும் அகஸ்டின், ஹென்றி மார்கஸ் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, அந்தோணி ஜோசப்பின் பாதிரியார் பட்டம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2021

    23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • oxygen-22

    ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

  • oxyyge11

    ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

  • koronaasadaaa1

    குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

  • black-girl22

    அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்