ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
2019-01-30@ 03:59:50

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முன்னாள் இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சரும், மூத்த தொழிற்சங்கத் தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைந்து விட்டார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நெருக்கடி நிலையை எதிர்த்து கடுமையாகப் போராடிய அவர், தமிழகத்தில் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற திமுக ஆட்சியில் ஜனநாயகக் காற்றைச் சுவாசித்தவர் மட்டுமல்ல - இறுதிவரை உற்ற நண்பராக இருந்தவர்.
கார்கில் போரில் இந்திய வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் என்பதை யாரும் மறந்திட இயலாது. தன் வாழ்நாள் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஓயாது பாடுபட்டவர். அவர் விட்டுச் சென்றுள்ள மகத்தான பணிகள் தொழிலாளர் வர்க்கம், அடித்தட்டு மக்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோர் மத்தியில் என்றைக்கும் நீங்காப் புகழுடன் நிலைத்திருக்கும். “மாபெரும் மக்கள் தலைவர்” ஒருவரை இழந்து தவிக்கும் அவரது உறவினர்களுக்கும், தொழிலாளத் தோழர்களுக்கும், சோசலிஸ சிந்தாந்த ஆர்வலர்களுக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதோடு, திமுக சார்பில், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார். இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
'நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று நாம் சமத்துவம் பேசுவது தேச விரோதமா?'... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
சொல்லிட்டாங்க...
அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடம் அளித்தது தவறு: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு
காங்கிரசில் நீக்கப்பட்ட குல்தீப் பிஸ்னோய் பாஜ.வுக்கு தாவல்
சொல்லிட்டாங்க...
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!