நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி வரை உறைபனி நீடிக்கும் - விஞ்ஞானி தகவல்
2019-01-23@ 00:06:04

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் அடுத்தமாதம் வரை உறை பனியின் தாக்கம் இருக்கும் என்றும், அதன்பின் படிப்படியாக குறையும் என நீர்வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் இறுதி முதல் நீர்பனி விழத்துவங்கும். இது ஒரு மாதம் நீடிக்கும். தொடர்ந்து அக்டோபர் மாதம் இறுதி வாரத்திற்கு மேல் துவங்கும் உறைப்பனி பிப்ரவரி மாதம் இறுதி வரை நீடிக்கும். ஆனால், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதிக்கு பிறகு உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. நாள்தோறும் உறைப்பனி கொட்டி வருவதால், ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புல்வெளிகள் வெள்ளை கம்பளம் விரித்தார்போல் காட்சியளிக்கிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உறைப்பனியின் தாக்கம் இந்த மாதம் இறுதி வரை நீடிக்கும். அதன்பின்னரே படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என மத்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் தெரிவித்தார். இதுபற்றி நேற்று அவர் கூறும்போது, `நீலகிரி மாவட்டத்தில் இம்முறையின் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என ஏற்கனவே கூறி வந்தோம். அதேபோல், உறைப்பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த உறைப்பனி பொழிவு பிப்ரவரி மாதம் இறுதி வரை நீடிக்கும். இதனால் தேயிலை தோட்டங்கள், மலை காய்கறிகள் பாதிக்கும் சூழல் உள்ளது. விவசாயிகள் தங்களது பயிர்களை தண்ணீர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.
நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக வெப்பநிலை 19 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் மைனஸ் 2 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது.
மேலும் செய்திகள்
காவேரிப்பாக்கத்தில் ரூ3 கோடியில் அமையும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது?.. பொதுமக்கள் கேள்வி
சமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு: பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை
சீர்காழி நகை கொள்ளை சம்பவம்..! தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை
நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!