உலக வங்கி தலைவராக இந்திரா நூயிக்கு வாய்ப்பு
2019-01-17@ 01:50:58

நியூயார்க்: உலக வங்கி தலைவராக இந்திரா நூயியை நியமிக்க வெள்ளை மாளிகை பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தை சேர்ந்தவர் இந்திரா நூயி. சென்னையில் பிறந்த இவர், பெப்சி உட்பட பல நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகித்துள்ளார். பெப்சியில் 12 ஆண்டு பணியாற்றி தலைமை செயல் அதிகாரியாக ஓய்வு பெற்றார். அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளார். இந்நிலையில், உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திரா நூயியை நியமிக்க வெள்ளை மாளிகை பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது உலக வங்கி தலைவராக உள்ள ஜிம் யங் கிம் பிப்ரவரி மாதம் இந்த பதவியில் இருந்து விலகி, தனியார் உள்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனத்தில் சேர இருக்கிறார்.
பதவிக்காலம் முடிய மூன்று ஆண்டு உள்ள நிலையில் இவரது விலகல் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இந்திரா நூயி உட்பட பலரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. டிரம்ப் மகள் இந்திரா நூயி நியமிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். உலக வங்கி தலைவர் பதவிக்கு டிரம்ப் நேரடியாக ஒருவரை நியமிக்க முடியாது. உலக வங்கி நிர்வாக குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், அமெரிக்க அதிபர் நியமனத்துக்கு வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளிப்பது வழக்கமான நடைமுறையாக உள்ளது என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
நகை வாங்க சூப்பர் சான்ஸ் : சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,968க்கு விற்பனை!!
50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்
அமெரிக்க அதிபர் பதவியேற்பு காரணமாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை!: வரலாற்றில் முதல்முறையாக 50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்..!!
ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கம்: சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.37,528-க்கு விற்பனை
தட்கலில் காஸ் சிலிண்டர் பெற கூடுதலாக ரூ25 கட்டணம் வசூல்
2-வது நாளாக ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.37,152-க்கு விற்பனை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!