SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டப்பேரவையில் அமளி மன்னிப்பு கேட்டார் அஜித் பவார

2013-04-09@ 01:09:30

மும்பை : மகாராஷ்டிராவில் அணைகள் வறண்டு கிடப்பது பற்றிய தனது கிண்டல் பேச்சுக்கு துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ்  தலைவருமான அஜித் பவார் சட்டப்பேரவையில் நேற்று மன்னிப்பு  கேட்டார். மகாராஷ்டிராவில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி சோலாப்பூரை சேர்ந்த விவசாயி ஒருவர் கடந்த 55 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இது பற்றி துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கட்சிக் கூட்டத்தில் பேசும்போது கிண்டல் செய்தார்.  ''அணைகளில் தண்ணீர் இல்லாதபோது எங்கிருந்து திறந்து விட முடியும்? நாங்கள் என்ன சிறுநீர் கழித்தா அணைகளை நிரப்ப முடியும்? குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலையில் சிறுநீர் கழிப்பதுகூட சாத்தியமற்றது'' என்றார்.

அஜித் பவாரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை நேற்று காலையில் கூடியதும் பா.ஜ., சிவசேனா உறுப்பினர்கள் அஜித் பவாரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். கோஷம் எழுப்பியபடி அவையின் மையப்பகுதிக்கு சென்றனர். இதைத் தொடர்ந்து பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடியபோது அஜித் பவார் தமது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இது குறித்து பவார் கூறுகையில், “பொதுக்கூட்டத்தில் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தி இருக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களை புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை'' என்றார். அஜித்பவாரின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக டூவிட்டர் இணையதளத்தில் மத்திய அமைச்சர் சரத்பவார் குறிப்பிட்டுள்ளார்.

rite aid load to card coupons link rite aid store products
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்