என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மீனாவின் இழப்புக்கு விரைவில் பதிலடி: ஆடியோ வெளியீட்டால் பரபரப்பு
2018-10-16@ 00:49:50

திருமலை: போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மீனாவின் இழப்புக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்று ஆடியோ வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆந்திராவின் அரக்கு தொகுதி எம்எல்ஏ சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகியோர் கடந்த 23ம் தேதி மாவோயிஸ்ட்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திரா- ஒடிசா மாநில எல்லையில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்திற்கு பிறகு ஆந்திரா, ஒடிசா மாநில போலீசார், சிஆர்பிஎப் இணைந்து தொடர்ந்து வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் நடந்த போலீசார் துப்பாக்கிச் சூட்டில் மீனா என்ற பெண் மாவோயிஸ்ட் இறந்தார்.
மீனா ஆந்திரா- ஒடிசா மாநில எல்லை மாவட்ட கமிட்டி இயக்கத்தின் உறுப்பினராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று ஆந்திரா - ஒடிசா மாவோயிஸ்ட்கள் மண்டல கமிட்டி தலைவர் கைலாசம் என்ற பெயரில் ஊடகத்துறைக்கு அனுப்பப்பட்ட ஆடியோவில், போலீசார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாவோயிஸ்ட் மீனாவின் இழப்பு எங்கள் இயக்கத்திற்கு தீர்க்க முடியாத பேரிழப்பு. இதற்கு உரிய பதிலடி விரைவில் வழங்கப்படும். போலீசார் மலைவாழ் மக்கள் சிலரை வேண்டுமென்றே பிடித்து வைத்து துன்புறுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லாத நிலையில் அவர்களை போலீசார் கொடுமைப்படுத்துகின்றனர். உடனடியாக போலீசார் அதனை கைவிட வேண்டும். மலைவாழ் மக்களுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்த வேண்டும். போலீசாரின் தொடர் நடவடிக்கை மலைவாழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சன்னிலியோன் நிகழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!