பா.ஜனதா முன்னாள் கவுன்சிலர் வெடிகுண்டு வீசி கொலை
2013-03-20@ 00:21:10

பரமக்குடி : பரமக்குடியில் நகராட்சி பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பட்டப்பகலில் வெடி குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடி அம்மன் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் தேங்காய் கடை முருகன்(45). கடந்தமுறை பாஜ கட்சி சார்பில் போட்டியிட்டு நகராட்சி கவுன்சிலராக இருந்தார்.
இந்நிலையில் நேற்று பகல் 2 மணியளவில் அவரது வீடு அருகே உள்ள பெட்டிக்கடையில் அமர்ந்து இருந்தார். அப்போது பைக்கில் அங்கு வந்த 3 பேர் முருகனிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென முருகன் மீது அவர்கள் மூன்று பைப் வெடிகுண்டுகளை வீசினர். இதில் ஒன்று வெடித்துச்சிதறியது. எனினும் முருகன் அதிலிருந்து உயிர் பிழைத்தார்.
இதையடுத்து முருகனை, 3 பேரும் அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே முருகன் இறந்தார். வெடிகுண்டு சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், கொலையாளிகளை பிடிக்க முயன்றனர். ஆனால் கொலையாளிகள் பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்த ஏஎஸ்பி விக்ரம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
குற்றவாளிகளை உடனே கைது செய்யவும், கொலைக்கான காரணத்தை கண்டறியவும் வலியுறுத்தி பொதுமக்கள் மாலை 4 மணியளவில் பரமக்குடி,ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். பட்டப்பகலில் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரமக்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்
அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை
பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: விமான நிலையத்தில் தப்பியவர் ரயில் நிலையத்தில் சிக்கினார்
டாஸ்மாக் விடுமுறையை பயன்படுத்தி மது விற்ற 2 பேர் கைது: 120பாட்டில்கள் பறிமுதல்
பேருந்து நிலையத்தில் தூங்கிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவர் கைது
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்12 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!