சென்னையில் 471 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
2018-10-10@ 11:14:23

சென்னை : சென்னையில் 471 புதிய பேருந்துகளின் சேவையை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியானது போக்குவரத்துத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். ரூ.127 கோடி மதிப்பில் 471 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
அதில் 60 பேருந்துகள் ஏசி வசதி மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் ஆகும். விழுப்புரம் கோட்டத்திற்கு 103 பேருந்துகளும் சேலம் கோட்டத்திற்கு 77 பேருந்துகளும் கோயம்பத்தூர் கோட்டத்திற்கு 40 பேருந்துகளும் கும்பகோணம் கோட்டத்திற்கு 111 பேருந்துகளும் மதுரை கோட்டத்திற்கு 30 பஸ்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவையானது இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையம் திறப்பு
திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் ரூ.95 கோடி செலவில் அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் இருந்து ஆந்திரா, தெலங்கானாவுக்குச் செல் லும் புறநகர் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.
இதன்படி, சென்னையை ஒட்டியுள்ள மாதவரத்தில் ரூ.95 கோடி செலவில் அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசல் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில்: அதானி குழும நிறுவங்களின் பங்குகள் விலை வீழ்ச்சி
2023 ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்: டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1.48 லட்சம் பயணிகள் அதிகம்
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்க ரயில் மூலமாக வேலூர் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநகர பேருந்தை நடத்துனர்கள் இயக்கக் கூடாது: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாளர் சுற்றறிக்கை
2,715 பெண் காவலர்களுக்கு 2ம் கட்ட ‘ஆனந்தம்’ பயிற்சி: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
வில்லிவாக்கத்தில் கடைகளுக்கு நிவாரணம் கோரி வியாபாரிகள் சாலை மறியல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!