இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்கும
2013-03-18@ 12:03:27

மீனம்பாக்கம்: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதான விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இலங்கை பிரச்சனையில் தமிழக மக்களுக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மன திருப்தி ஏற்படுத்தும் விதத்தில் மத்திய அரசு முடிவு எடுக்க உள்ளது. இதுபற்றி பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் அறிவிப்பார். அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது பற்றி மத்திய அமைச்சரவைதான் முடிவு செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில் கருத்து எதுவும் கூற முடியாது.
பா.ஜ.வை பொருத்தவரையில் இந்த விஷயத்தில் குட்டையை குழப்பி கொண்டிருக்கிறது. அதனால்தான் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ள கருத்துக்கு உடனடியாக வரவேற்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணி உடையாதா என்று கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜ எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. பா.ஜ. எதிர்க்கட்சி. எனவே அவர்கள் தங்களுடைய வேலையை செய்கின்றனர். அதே நேரத்தில் நாங்கள் ஆளும் கூட்டணி. எனவே எங்களுடைய கடமையை நாங்கள் செய்வோம். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
மேலும் செய்திகள்
நாகர்கோவிலில் புதுப்பொலிவு பெறும் மாநகராட்சி பூங்கா: விளையாட்டு உபகரணங்கள் அதிகளவில் அமைக்க திட்டம்
களக்காடு பகுதியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி: 1 கிலோ ரூ.26க்கு விற்பனை
இலங்கை தமிழர்களுக்கு யாசகர் ரூ.10 ஆயிரம் நிதி
வெம்பக்கோட்டை அகழாய்வில் பழங்கால குவளை கண்டெடுப்பு
புதுச்சேரி, வடதமிழகத்தில் பருவமழை மாற்றத்தால் செங்கல் உற்பத்தி பணிகள் பாதிப்பு: விலை மேலும் உயரும் ஆபத்து
திருவையாறில் சப்தஸ்தான விழா ஏழூர் சாமி பல்லக்கு வீதியுலா கோலாகலம்: இரவு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!