SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதி மன்ற விசாரணைக்கு வந்தபோது தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் மாரடைப்பால் மரணம்

2018-09-21@ 00:05:53

சென்னை: சுதந்திர போராட்ட வீரரும் தமிழறிஞருமான கி.த.பச்சையப்பன்  வழக்கு தொடர்பாக நீதி மன்றத்திற்கு வந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் கி.த.பச்சையப்பன் (85). சுதந்திர போராட்ட தியாகி, ஆசிரியரான இவர், சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு ெபற்றவர். பல நூல்களை  இயற்றியுள்ளார். இவருக்கு தமிழக அரசு தமிழ் புலவர் பட்டமும் வழங்கி கவுரவித்தது. திரைப்படம், நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் பச்சையப்பன் நேற்று காலை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வந்துள்ளார். அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கி கிழே விழுந்துள்ளார். அவருடன் வந்த மகன் உடனே பதற்றமடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பச்சையப்பனை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து,  அவரது உடல் வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்கள், அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்