SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலூர் அருகே புதுமை கேப்சூல் மூலம் நெல் நடவு பணி

2018-09-14@ 00:28:46

ஸ்ரீமுஷ்ணம்: கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே சேல்விழி கிராமத்தில் விவசாயிகள் சம்பா நெல் நடவு பணிகள் செய்து வருகின்றனர். போதிய மகசூல், லாபம் கிடைக்காததால்  இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிவக்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நெல் நடவில் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். நெல்மணிகளை நாற்றங்காலில் இடாமல் ஜெலட்டின்  கேப்சூல்களில் இட்டு இவர்கள் சாகுபடி செய்துள்ளனர். திருச்சியை சேர்ந்த பொறியாளர் ஒருவர் கேப்சூல் மூலம் பயிர் செய்வதை கண்டறிந்த இவர்கள் இந்த புதிய முறையை பின்பற்றி  நடவு  பணியை செய்ததாக கூறினர்.

ஒவ்வொரு கேப்சூல்களுக்குள்ளும் இரண்டு நெல்மணிகள், இயற்கை முறையில் தயாரான வேப்பங்கொட்டை தூள், எரு, நுண்ணூட்ட சத்து மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவை நிரப்பப்பட்டு  நடவு செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய சுமார் 60 ஆயிரம் கேப்சூல்கள் வீதம் தேவைப்படும். நாற்றங்கால் முறைக்கு ஏக்கருக்கு சுமார் 30 கிலோ விதை நெல் தேவைப்படும். கேப்சூல்  முறையில் 2600 கிராம் விதை நெல்லே போதும் என கூறுகிறார்கள். இந்த முறையை பயன்படுத்துவதால் நூற் பூச்சி, வேர் பூச்சி போன்ற நோய்கள் பயிரை தாக்காது என்றும், இம்முறையில் சாகுபடி  செய்யும்போது நேரம், நீர் மிச்சமாவதுடன், விளைச்சல் அதிகமாவதோடு, அதிக நோய் தாக்குதலும் ஏற்படுவதில்லை என இவர்கள் கூறுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் முதன் முதலாக  இப்பகுதியில் கேப்சூல் நடவு முறை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்