SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெர்மன் உளவாளியிடம் விசாரணை நடத்தாமல் நாடு கடத்தியது ஏன்?

2012-03-01@ 02:00:10

நெல்லை : மதுரையில் ஏப்ரல் 28, 29ம் தேதிகளில் நடக்கும் பாஜ மாநில மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது.  கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜ. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கூடங்குளம் அணு மின்நிலைய எதிர்ப்பு குழுவுக்கு வெளிநாட்டிலிருந்து பண உதவி செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் தெரிவித்தனர்.

நாகர்கோவிலில் கைதான ஜெர்மன் உளவாளி சன்டெக் ரெய்னர் ஹெர்மனிடம் விசாரணை எதுவும் நடத்தாமல் நாடு கடத்தப்பட்டுள்ளார். இது மத்திய அரசு தமிழகத்துக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும்.  ஜெர்மன் உளவாளியிடம் விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொண்டு வராமல் விசாவை ரத்து செய்து அவரை உடனே ஜெர்மனுக்கு நாடு கடத்த வேண்டிய அவசியம் என்ன? இலங்கையில் நடந்த போரில் மனித உரிமை மீறப்பட்டது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் விசாரணை நடந்து வருகிறது.

விசாரணையின் முடிவில் இலங்கை அதிபர் ராஜபக்சே, போர்க் குற்றவாளியாக அடையாளம் காட்டப்படும் நிலையில் இந்தியா அவர்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பாஜ சார்பில் போட்டியிடும் முருகனை ஆதரித்து முன்னணி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இரவு நேரங்களில் மின்வெட்டால் பாடங்களை படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

drug coupon card prescription drugs coupons drug discount coupons
plavix tonydyson.co.uk plavix plm
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicilline amoxicillin amoxicillin nedir

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்