தொழிலாளர் பற்றாக்குறையை போக்க கிராமங்களில் பின்னலாடை பயிற்சி பள்ளிகள் துவக்கம்
2018-09-11@ 01:01:13

திருப்பூர்: பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்க கிராமங்களில் பயிற்சி பள்ளிகள் துவங்கி உதவித் தொகையுடன் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக ஆர்டர்கள் அதிகளவு வரத் துவங்கியுள்ளது. கார்ப்பரேட் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆடை உற்பத்தியை அதிகரிக்க தொழில் கூடங்களை பல்வேறு பகுதிகளில் விரிவுபடுத்தி வருகின்றன. உற்பத்தியை அதிகரிக்க நவீன இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதற்காக பல கோடி செலவாகும். வெளிநாட்டு ஆர்டர்களை நம்பி பல கோடி முதலீடு செய்து ஆர்டர் ரத்தாகும்போது போட்ட முதலீடு இழக்க நேரிடும் என்பதால் பெரும்பாலான பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் வெளி நிறுவனங்களுக்கு ஜாப்-ஆர்டர் வழங்கி வருகின்றன. இதனால், தரம் குறைய வாய்ப்பு இருப்பதோடு குறைபாடு நிறைந்த ஆடைகளாக திரும்பி வருகிறது. இதனால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பொருளாதார வகையில் இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் கார்பரேட் நிறுவனங்கள் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி பள்ளிகளை பல்வேறு கிராமங்களில் துவங்க உள்ளன. கிராம புறங்களில் போதிய மழை இல்லாததால் விவசாய கூலி தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அக்கிராமங்களிலேயே முறையாக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து கார்பரேட் பின்னலாடை ஏற்றுமதி நிறுவன மேலாளர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், வடமாநில தொழிலாளர்களுக்கு பலமுறை பயிற்சி அளித்தாலும் முறையாக செய்வதில்லை. இதனால், ஆடைகளில் குறைபாடு ஏற்படுகிறது. இதைத்தவிர்க்கும் வகையில் கிராமங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி பள்ளிகள் அமைத்து பயிற்சி அளிக்க உள்ளோம். அவர்களுக்கு அதிக சம்பளமும் வழங்க உள்ளோம் என்றார்.
மேலும் செய்திகள்
சற்றே அதிகரித்த தங்கம் விலை : சவரனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ.36,976-க்கு விற்பனை!!
தமிழகத்தில் பெட்ரோல் விலை 88ஐ எட்டியது: நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் கடும் அவதி
இனி அதிகாலையில் விலை நிர்ணயம்; நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசு உயர்வு: என்இசிசி அறிவிப்பு
இனி தங்க வேட்டை: 37,000-க்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.36,816-க்கு விற்பனை
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
27,000 முதல் 44,000 வரை மாருதி கார் விலை சலுகை பெற இன்றே கடைசி நாள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்