SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய தொழில் தொடர்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி கழக தயாரிப்பு இருசக்கர வாகனத்தில் 15 பேர் பயணம் செய்யலாம்: ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது

2018-08-24@ 01:24:51

சென்னை: 15 பேர் அமரக்கூடிய இருசக்கர வாகனம் தயாரித்து இந்திய தொழில் தொடர்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி கழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சென்னை கொளத்தூரில் இந்திய தொழில் தொடர்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த ஆராய்ச்சி கழகத்தில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 3 மாதத்திற்கு ஒருமுறை ஏதேனும் புதிய கண்டுபிடிப்புகளை செய்து வரும் இந்த ஆராய்ச்சி கழகத்தின் மாணவர்கள் தற்போது 15 பேர் அமரக்கூடிய இரு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார்கள். சுமார் ஒன்றரை லட்சம் ருபாய் செலவில் கடந்த 8 மாதங்களாக 70 மாணவர்கள் சேர்ந்த குழுவினர் உழைத்து வடிவமைக்கபட்ட இந்த இரு சக்கர வாகனம் ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதற்கான விழா நேற்று நடைபெற்றது.

விழாவில், மாணவகளின் சாதனைக்கான சான்றிதழ்களை முறைபடி அதிகாரிகள் வழங்கினர். இந்த வாகனம் மக்கள் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படவில்லை. மாணவர்களின் தொழில் நுட்ப திறனை மேம்படுத்தவும் சாதனைக்காகவும் மட்டுமே இந்த இரு சக்கர வாகனம் வடிவமைக்கப்பட்டது.இதுகுறித்து இந்திய தொழில் தொடர்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் நிறுவனர் சுந்தரபாண்டியன் கூறியதாவது, ‘சுமார் 6.8 மீட்டர் நீளம் 1.2 மீட்டர் அகலம் கொண்ட இந்த இருசக்கர வாகனம் ‘டூவீல் டிரைவ் தன்மை கொண்டது. 12 குதிரை திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின், 2 குதிரை திறன் கொண்ட எலக்ட்ரிகல் இன்ஜின் மற்றும் 1500 வாட்ஸ் சிலிக்கான் செல் பேட்டரி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பயன்படுத்தப்படும் பழைய மோட்டார் சைக்கிள்களின் பாகங்களை கொண்டும் அதை தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டும், ஒருசில பாகங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இந்த வாகனம் கின்னஸ் சாதனையில் இடம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மாணவர்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட கல்வி கற்று தருவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அவர்களின் ஆர்வம் மற்றும் திறமைக்கேற்ப புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கபடுகிறது. இதனால் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை தயாரிக்க முடிகிறது. 10க்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளின் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நாங்கள் கண்டுபிடித்த பேட்டரியால் இயங்கும் ஆட்டோ இந்திய அளவில் 4 இடம் பெற்று பரிசு பெற்றதுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் மத்திய அரசின் இலவச திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் படித்து வருவதால் கட்டண சலுகைகள் அளிக்கப்படுகிறது. தொழில் கற்று தருவதுடன் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி மாணவர்களை அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்