SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆகஸ்ட் 7-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்பு

2018-08-04@ 19:53:23

டெல்லி: ஆகஸ்ட் 7-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினீர் சரண் மற்றும் உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்தது. இதனையடுத்து கொலிஜியத்தின் பரிந்துரை அனைத்தையும் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, வரும் 7-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.

மேலும் வினீத்சரண் மற்றும் குட்டியில் மேத்யூ ஆகியோரும் பதிவியேற்க உள்ளனர். இவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்திரா பானர்ஜி நியமனத்தால் உச்சநீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பானுமதி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய பெண் நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவி வகிக்கின்றனர். புதிதாக நியமிக்கப்பட்டவர்களோடு சேர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. எனினும், 6 நீதிபதிகள் பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திரா பானர்ஜி நியமனம்:
கடந்த 2002-ம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட உள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்