புதிய அமைச்சர்கள் பதவியேற்பு : கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார
2013-02-28@ 14:36:57

சென்னை: தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட வைகை செல்வன், பூனாட்சி, கே.சி.வீரமணி ஆகியோர் இன்று காலை பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் ரோசய்யா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழக அமைச்சரவையில் நேற்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டது. 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக 3 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திரா, பள்ளிக் கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்த என்.ஆர்.சிவபதி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜய் ஆகியோர் நேற்று பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அருப்புக்கோட்டை தொகுதி எம்எல்ஏ வைகைச் செல்வன், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ பூனாட்சி, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ கே.சி.வீரமணி ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். வைகைச் செல்வனுக்கு பள்ளி கல்வித்துறையும், பூனாட்சிக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறையும் கே.சி.வீரமணிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன், சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு கூடுதல் பொறுப்பாக சட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா, கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இன்று காலை 11 மணிக்கு நடந்தது. வைகைச் செல்வன், பூனாட்சி, கே.சி.வீரமணி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டார். அவர்களுக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும் அமைச்சர்கள் அனைவரும் கவர்னர், முதல்வருடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். புதிய அமைச்சர்கள் 3 பேரும் தலைமைச் செயலகத்துக்கு வந்து உடனடியாக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.
மேலும் செய்திகள்
குப்பையில் கிடந்த 10 சவரன் போலீசாரிடம் ஒப்படைப்பு: தூய்மை பணியாளருக்கு பாராட்டு
போடாதவருக்கு போட்டதாக கணக்கு காட்டி புது மோசடி? கொரோனா ெடஸ்ட் எடுத்தவருக்கு கோவாக்சின் போட்டதாக மெசேஜ்: வத்தலக்குண்டுவில் வசிக்கும் சென்னை இன்ஜினியர் ‘ஷாக்’
ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 6 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்கள் விவரம் சேகரிப்பு: குளறுபடிகளை தவிர்க்க நடவடிக்கை
பாளை மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல் ஒருவர் அடித்துக் கொலை: 3 பேர் படுகாயம்
மதுரை சித்திரை திருவிழா மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம்: நாளை திருக்கல்யாணம்
‘குட்டி ஜப்பானை’ மீண்டும் குறிவைக்கிறது கொரோனா பட்டாசு உற்பத்தி பாதிக்குப்பாதி குறையும்?: வடமாநில ஆர்டர்கள் குறைவு
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!