கிருஷ்ணகிரி பாரூர் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு முதல்வர் உத்தரவு
2018-06-29@ 00:17:51

சென்னை: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல்போக சாகுபடிக்கு ஜூலை 1ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை 135 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2397.42 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
டெல்லியில் விவசாயிகள் தாக்குதலை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்
தேசிய வாக்காளர் தின போட்டியில் அரசினர் சிற்ப கல்லூரி மாணவர் முதலிடம்
மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் நிறைவடையாமலே விளையாட்டு மைதான பணி முடிந்ததாக கல்வெட்டு: அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு
பெண்கள் பயணிக்க கூடுதல் பெட்டி அமைக்க காஞ்சிபுரம் எம்எல்ஏ கோரிக்கை மனு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!