அப்சல் தூக்குக்கு எதிர்ப்பு காஷ்மீரில் போராட்டம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
2013-02-11@ 01:04:50

ஸ்ரீநகர் : நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து காஷ்மீரில் நேற்று 2வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.
நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டார். இவர் காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதால் அங்கு பதற்றம் நிலவியது.
இதையடுத்து காஷ்மீரில் நேற்று இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர். பாராமுல்லா மாவட்டத்தில் நேற்று போராட்டம் நடத்திய கும்பலை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 4 பேர் காயம் அடைந்தனர். அதில் 2 பேர் ஸ்ரீநகரில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட னர். இவர்களில் ஒருவர் பலியானார்.
அரசு கேட்டுக் கொண்டபடி செய்தி சேனல்களை கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் ஒளிபரப்பவில்லை. ஊரடங்கு உத்தரவால் செய்திதாள்களும் மக்களை சென்றடையவில்லை.
மேலும் செய்திகள்
விவசாயிகள் ஆளும் காலம் வந்து விட்டது: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சு
பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது: அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கண்டனம்
பணமதிப்பிழப்பு தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு
ஆன்லைன் சூதாட்டம், கடன் சேவை 232 சீன ஆப்களுக்கு ஒன்றிய அரசு தடை
நாட்டின் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை: பிரதமர் மோடி பேச்சு
சபரிமலையில் மலை போல் குவிந்த நாணயங்கள் எண்ணும் பணி மீண்டும் தொடங்கியது: 520 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!