திருச்சி ஐஐஎம் வளாகத் தேர்வில் ரூ. 54.5 லட்சம் சம்பளத்தில் 3 மாணவர்களுக்கு வேலை
2018-05-09@ 18:25:04

திருச்சி: திருச்சி அருகே நவல்பட்டில் இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) அமைந்துள்ளது. இதில் ஏராளமானோர் படித்து வருகின்றனர். மேலாண்மை முதுகலை படிப்பில் 2016- 18ம் கல்வி ஆண்டு வளாக தேர்வில் திருச்சி ஐஐஎம் சாதனை படைத்துள்ளது.வளாக தேர்வில் பிரபல முன்னணி நிறுவனங்கள், வங்கிகள் என மொத்தம் 113 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் நிதி, விற்பனை மற்றும் மார்க்கெட்டிங், மனிதவளம், பொதுமேலாண்மை உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்தனர்.
இந்த வளாக தேர்வில் மொத்தம் 176 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 172 பேருக்கு பணி நியமன ஆணை கிடைத்தது. 4 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.
வளாக தேர்வில் வெளிநாட்டு வேலைக்கு 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 54.5 லட்சம் சம்பளத்தை தனியார் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இதே போல் 169 பேருக்கு உள்நாட்டில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.அவர்களுக்கு ஆண்டு சம்பளம் தலா ரூ. 31 லட்சத்து 70 ஆயிரம் கிடைக்கும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சராசரி சம்பளம் 7.4 சதவீதமும், வேலைவாய்ப்பு 4சதவீதமும் அதிகரித்துள்ளது.
வளாக தேர்வு தலைவர் அபிஷேக் தோட்டவார் கூறுகையில், திருச்சி ஐஐஎம்-ல் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த கல்வியாண்டை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 63 சதவீதம் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது திருச்சி ஐஐஎம்மிற்கு பெருமை சேர்த்து வருகிறது என்றார்.இயக்குனர் பீமராயமேத்ரி கூறுகையில், நாட்டில் உள்ள ஐஐஎம்மில் திருச்சியும் முன்னணியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வேகமாக வளர்ந்து வருகிறது என்றார்.
மேலும் செய்திகள்
கோவில்பட்டி அருகே கோயிலின் செம்பு கலசம் குளத்தில் வீச்சு: கொள்ளையடிக்கப்பட்டதா? போலீஸ் விசாரணை
வேதாரண்யத்தில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்
வெயில், பூச்சிகள் தாக்குதலால் மா விளைச்சல் கடும் பாதிப்பு: விவசாயிகள் கவலை
விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரர் கோயிலில் மூலவரை தரிசனம் செய்த சூரியபகவான்
தாக்குதலுக்குள்ளான மருத்துவர்களை நேரில் சந்தித்து சமாதானப்படுத்திய ஆட்சியர்: தஞ்சையில் நெகிழ்ச்சி
குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் பாழாகும் புழல் ஏரி தண்ணீர்: பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்குமா?
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!