SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேனி தேவதானப்பட்டி அருகே இருதரப்பு மோதல்: 50 வீடுகள் சேதம் : வாகனங்கள், கடைகளுக்கு தீவைப்பு

2018-05-06@ 02:24:15

தேவதானப்பட்டி : தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர்களுக்கும், காலனி தெருவை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த மாதம் காலனி தெருவை சேர்ந்த வேலு மனைவி வன்னியம்மாள்(62) இறந்து விட்டார். இவரது உடலை மயானத்திற்கு எடுத்து செல்லும்போது இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது. இதில் சில கடைகள், வீடுகள் சேதமானது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஜெயமங்கலம் போலீசார் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஒருவர் காலனி தெரு வழியாக தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரிடையே மீண்டும் கலவரமாக மாறியது. இருதரப்பினரும் கற்கள், கம்பி, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர்.

இதில் கலைச்செல்வன், வேலுத்தாய், ஆரிப்ராஜா, அக்கீம் உட்பட 50 பேர் காயமடைந்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பிலும் 50 வீடுகள் சேதமடைந்தன. ஒரு கார், டூவீலர், ஆட்டோ, ஸ்டூடியோ, கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடைக்கு தீ வைக்கப்பட்டது. தகவலறிந்ததும் திண்டுக்கல் சரக டிஐஜி ஜோசி நிர்மல் குமார், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மற்றும் போலீசார் வந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொம்மிநாயக்கன்பட்டியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்டதாக 100 பேரை ஜெயமங்கலம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்