SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பழுதடைந்து வரும் உறை கிணறுகள்

2018-05-02@ 11:57:59

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தின் ஜீவநாடியாக விளங்கி வரும் தாமிரபரணி ஆறு, குழித்துறை வழியாக சுமார்  62 கி.மீ. தூரம் பாய்ந்து தேங்காப்பட்டணம் பகுதியில் அரபிக்கடலுடன் கலக்கிறது. குழித்துறை  நகராட்சி, பாகோடு, நல்லூர், உண்ணாமலைக்கடை, மெதுகும்மல் உட்பட மேற்கு மாவட்ட உள்ளாட்சி  அமைப்புகள் பலவும் தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகளை அமைத்துள்ளன. மேலும்  குழித்துறை கூட்டுக்குடிநீர் திட்டம், கடற்கரை கிராமங்களுக்கு குடிநீர்  வழங்கும் விளாத்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் போன்றவையும் தாமிரபரணி ஆற்றை  நம்பியே செயல்படுகின்றன. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளி  கடத்தும் பணி ஜரூராக நடந்து வந்தது. இதனால், ஆற்றின் ஆழம் அதிகரித்து அதன்  போக்கிலும் மாற்றம் ஏற்படும் அபாயம் உருவானது.  

மேலும், ஆற்றில்  குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக பழவாறு, அஞ்சாலிக்கடவு, அதங்கோடு, குழித்துறை,  கண்ணக்கோடு, திக்குறிச்சி, ஞாறாம்விளை, ரயில்வே பாலம் அருகே, குழிக்கடவு, சென்னித்தோட்டம் உட்பட பல பகுதிகளில் மணல் கடத்தல் ஜரூராக நடந்து வருகிறது. இதனால் ஆற்றோரம் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. மேலும், பல கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள இந்த உறைகிணறுகள் பராமரிக்கப்படாததால் பழுதடைந்தும் வருகின்றன. பொதுவாக உறைகிணறுகள் ஆற்றின் ஓரம் அமைக்கப்படுவதால் அதில் ஆற்று நீர் நேரடியாக  கலக்காமல் மணல் வழியாக ஊறி சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக கிடைக்கும். ஆனால்  கோடை காலங்களில் தண்ணீர் அதிகம் கிடைக்காது. இதனால் உள்ளாட்சி ஊழியர்கள் அதிக தண்ணீர் கிடைக்க உறை கிணற்றின் பக்கச்சுவரை உடைத்து ஆற்று நீரை  நேரடியாக கலக்க செய்கின்றனர். இதனால் சேறும், சகதியுமாக தூய்மையற்ற குடிநீர் பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க  தேங்காப்பட்டணம் பொழிமுக பகுதியில் மணல் திட்டை அகற்றியதாலும், நிலத்தடி  நீர் குறைந்து வருவதாலும், தாமிரபரணியில் புதிய தடுப்பணைகள் அமைக்காததாலும்  கடல்நீர் ஆற்றுடன் கலந்து உப்புச்சுவை அதிகரித்துள்ளது. இதனால் பல  உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் குடிநீர் உப்புச் சுவையுடன் உள்ளது. இதனால்  இந்த நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். நீராதாரங்களை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற சிறப்பு திட்டம் உருவாக்க வேண்டும். கடல்நீர் உட்புகாமல் இருக்க  தாமிரபரணியில் மேலும் சில தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். இதன் மூலம்  நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். அதுபோல புதிய குடிநீர் திட்டங்கள்,  உறைகிணறுகள் அமைக்க வேண்டும். ஏற்கனவே பழுதடைந்து காணப்படும் உறைகிணறுகள்,  குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும். ஏவிஎம் கால்வாயை சீரமைத்து கடல்நீர் உட்புகாமல் தடுக்கலாம். ஏவிஎம் சானலில் நல்ல தண்ணீர் செல்லும்போது அதை  சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும். எனவே அரசு  உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

  • plane-crashe-13

    அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

  • wine-12

    இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

  • Tiruppp1

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

  • andhratirupp

    திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்